MAP

உணவிற்காகக் காத்திருக்கும்  காசா மக்கள் உணவிற்காகக் காத்திருக்கும் காசா மக்கள்  (AFP or licensors)

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த பிப்ரவரி மாதம் ஏறக்குறைய 2,000 குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதத்திற்குள், அந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது அது ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது. - யுனிசெஃப்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

காசாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஏறக்குறைய 12,000 கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர் என்றும், இது இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளது யுனிசெப்ஃ பன்னாட்டுக் குழந்தைகள் நல அமைப்பு.

ஆகஸ்ட் 11, திங்கள்கிழமை வெளியிட்டுள்ள சமூகவலைதளக் குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பானது, காசாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு அதிர்ச்சியூட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஏறக்குறைய 2,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர் என்றும், ஜூன் மாதத்திற்குள், அந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ள நிலையில் தற்போது அது ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது யுனிசெஃப்.

ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதற்கு இது தெளிவான சான்று என்று எடுத்துரைத்துள்ள யுனிசெஃப் அமைப்பானது, இச்சூழல் இளம் உயிர்களை பெரும் ஆபத்தில் ஆழ்த்துகிறது எனவே, ஆபத்தான இச்சீரழிவின் வேகத்திற்கு அவசரமான, பெரிய அளவிலான பதில் தேவைப்படுகிறது என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டை தடுத்தல் மற்றும் சிகிச்சையளிப்பதற்கான கருவிகள் உள்ளன. நிபுணத்துவம் உள்ளது என்றும், பாதுகாப்பான மற்றும் நிலையான அணுகல் இல்லாமல், அவை பயனற்றவை என்றும் தெரிவித்துள்ளது யுனிசெஃப்.

காசாவின் குழந்தைகளுக்கு பெரிய அளவிலான உதவி மற்றும் போர் நிறுத்தத்திற்கான அவசர அணுகல் இப்போது தேவை என்றும், ஜூலை மாதத்தில் மட்டும், காசாவில் ஏறக்குறைய 12,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர். இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த மாதாந்திர எண்ணிக்கையாகும் என்றும் எடுத்துரைத்துள்ளது யுனிசெஃப்.

காசாவில் அதிக உயிர்கள் இழக்கப்படுவதற்கு முன்பு உணவு அடிப்படை உதவி குழந்தைகளை அவசரமாக சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தி யுனிசெப்ஃபின் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்காவின்  X வலைதளத்தில் இவ்வாறு செய்தியைப் பதிவிட்டுள்ளது யுனிசெஃப் பன்னாட்டு குழந்தைகள் நல அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஆகஸ்ட் 2025, 11:36