MAP

உணவிற்காகக் காத்திருக்கும் மக்கள் உணவிற்காகக் காத்திருக்கும் மக்கள்   (ANSA)

போரின் ஆயுதமாக பசியை பயன்படுத்துதல் நிறுத்தப்பட வேண்டும்

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2026 ஜூன் மாதத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 1,32,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் அபாயத்தில் இருப்பார்கள் - Fatarella.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பசியைப் போரின் ஆயுதமாகப் பயன்படுத்துவதை இஸ்ரயேல் அரசு நிறுத்த வேண்டும் என்றும், காசா பகுதியின் முற்றுகையை நீக்கி, உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்ட உதவிகள் மக்களின் தேவைக்கேற்ப நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் Daniela Fatarella

ஆகஸ்டு 23, சனிக்கிழமை காசாவில் நிலவி வரும் உணவுப்பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்து வெளியிட்ட சேவ் த சில்ரன் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவ்வமைப்பின் இத்தாலிய இயக்குநர் Daniela Fatarella

மின்சாரம், எரிபொருள் மற்றும் நீரானது குழந்தைகள் மற்றும் மக்களுக்குத் தட்டுப்பாடின்றி கிடைக்கப்பட வேண்டும் என்றும், இஸ்ரேலிய அரசாங்கம் காசாவின் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை வேண்டுமென்றே பட்டினியாக வைத்திருப்பதைத் தடுக்க பன்னாட்டுச் சமூகம் இறுதியாக அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் Daniela Fatarella.

காசாவில் நிலவும் கடுமையான உணவுப்பற்றாக்குறை மற்றும் பஞ்சத்தினால், ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 132,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர், இந்த எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் அவ்வறிகையில் தெரிவித்துள்ளார் Fatarella.

எண் 1 என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாட்டினால் (IPC), காசாவில் 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்களில் பாதி பேரான குழந்தைகள், எண் 5 எனப்படும், பேரழிவு அல்லது பஞ்சம் என வகைப்படுத்தப்பட்ட பேரழிவு தரும் அளவிலான பசியை எதிர்கொள்வதாகவும் கூறியுள்ளார் Fatarella.

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2026 ஜூன் மாதத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 1,32,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் அபாயத்தில் இருப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார் Fatarella.

காசாவில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கற்பனை செய்ய முடியாத வேதனைகளைக் குழந்தைகள் அனுபவித்து வருகின்றனர் என்று கூறியுள்ள Fatarella  அவர்கள், சிறிய, மெலிந்த குழந்தைகளின் உடல்கள் பசி மற்றும் நோயால் மூழ்கடிக்கப்படுகின்றன, அவர்களுக்கு ஆதரவு வழங்கவும், உதவவும், உலகம் செயல்படத் தவறிவிட்டது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஆகஸ்ட் 2025, 12:29