MAP

தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள்  (ANSA)

உயிர்களைக் காப்பாற்றும் தடுப்பூசிகள் அவசியம்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இலட்சக் கணக்கான குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகளாவிய நலவாழ்வுப் பாதுகாப்பிற்காகவும் கல்விச் சுழற்சிக்கான (2026–2030) நிதி இடைவெளியை நிரப்பவும் அழைப்புவிடுத்துள்ளது உலக நலவாழ்வு அமைப்பு.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தடுப்பூசிகள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன என்றும், தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள், பொருளாதாரங்கள் மற்றும் நாடுகள் செழிக்க உதவுகின்றன என்றும் தெரிவித்துள்ளார் WHO தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்.

உலகளவில் 89 விழுக்காடு குழந்தைகள் அதாவது ஏறக்குறைய 11 கோடியே 50 இலட்சம் குழந்தைகள் டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் (DTP) தடுப்பூசியை குறைந்தது ஒருமுறையாவது பெற்றுள்ளனர் என்றும், 85 விழுக்காட்டினர் அதாவது ஏறக்குறைய 10 கோடியே 90 இலட்சம் குழந்தைகள் மூன்று முறையும் பெற்றுள்ளனர் என்று UNICEF வெளியிட்ட தேசிய தடுப்பூசி பாதுகாப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜூலை 15, செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதிய தரவுகளின் அடிப்படையிலான அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் உலகளாவிய குழந்தைகள் நல UNICEF அமைப்பானது வளர்ந்து வரும் சவால்களுக்கு மத்தியிலும், குழந்தைகளைப் பாதுகாக்க பாடுபடும் நாடுகளின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை இந்த முடிவுகள் குறிக்கின்றன என்றும் எடுத்துரைத்துள்ளது.

"தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிப்பைக் காண்பது ஊக்கமளிக்கிறது என்றும், இருப்பினும் இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ள கெப்ரயேஸ் அவர்கள்,  கடுமையான உதவிகள் தடுக்கப்படுதல், தடுப்பூசி பாதுகாப்பு பற்றிய தவறான தகவல்கள் இணைந்து, பல ஆண்டுகால முன்னேற்றத்தை அழிக்கும் வகையில் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் பகுதிகளில் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கானத் தீர்வுகளை உருவாக்குவதிலும், உயிர்காக்கும் சக்தி கொண்ட தடுப்பூசிகள் அனைத்து குழந்தைகளையும் சென்றடைவதற்காக தேசிய முதலீடுகளை அதிகரிப்பதிலும் உலக நாடுகளை ஆதரிப்பதற்கு, உலக நலவாழ்வு அமைப்பானது இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் கெம்பரயேஸ்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இலட்சக் கணக்கான குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகளாவிய நலவாழ்வுப் பாதுகாப்பிற்காகவும் கல்விச் சுழற்சிக்கான (2026–2030) நிதி இடைவெளியை நிரப்பவும் அழைப்புவிடுத்துள்ளது உலக நலவாழ்வு அமைப்பு.

மோதல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பலவீனமான சூழல்களில் வாழ்கின்ற அதிக குழந்தைகளைச் சென்றடையவும், கொடிய பாதிப்புக்களிலிருந்து அவர்களைத் தடுக்கவும் நோய்த்தடுப்பு மருந்துகளை வலுப்படுத்துதல் அவசியம் என்றும், உள்ளூர் மற்றும் தேசிய முதலீடுகளுக்கு முன்னுரிமை அளித்தல், முதன்மை நலவாழ்வுப் பராமரிப்பு அமைப்புகளுக்குள் நோய்த்தடுப்பு மருந்துகளை கொண்டுவருதல் அவசியம் என்றும் வலியுறுத்துகின்றது அவ்வறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 ஜூலை 2025, 12:24