MAP

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழந்த பாலஸ்தீனிய குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழந்த பாலஸ்தீனிய குழந்தை  

காசாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் குழந்தைகள்!

குழந்தைகளைப் பசியின் கொடுமையிலிருந்து பாதுகாக்க, உடனடி பன்னாட்டு நடவடிக்கைகள் தேவை : Edouard Beigbeder

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

2025, ஏப்ரல் முதல் காசாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 80 குழந்தைகள் இறந்துள்ளதாக யூனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

52 விழுக்காடாக இருந்த இந்த இறப்பு விகிதம் மூன்று மாதங்களுக்குள் 54 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றும், 100-க்கும் மேற்பட்டோர் பசியால் இறந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது யூனிசெஃப்பின்  அறிக்கை.

மேலும், கடந்த ஜூன் மாதத்தில் 6,500 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் சிகிச்சை பெற்றுள்ளதாகவும்,  ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இன்னும் 5,000 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளதோடு, நாளுக்கு நாள் இந்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும்  உரைத்துள்ளது.

அதேவேளையில், “இந்த இறப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ள  காசாவிற்கான யூனிசெஃப்பின் இயக்குனர் Edouard Beigbeder அவர்கள், “மனிதாபிமான உதவிக்குத்  தடை இல்லாத அணுகல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர  எரிபொருள் தொடர்ந்து  வழங்கப்பட வேண்டும்” என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

“குழந்தைகளைப் பசியின் கொடுமையிலிருந்து பாதுகாக்க, உடனடி பன்னாட்டு  நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன” என்றும், “போர் நிறுத்தம், பிணையக் கைதிகளை விடுவித்தல் ஆகியவை மிகவும் அவசியத் தேவை” என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் அவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜூலை 2025, 15:05