ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில் சிறுவர்கள் பாதிப்பு!
சுஜிதா சுடர்விழி-வத்திக்கான்
ஜூன் 20-ஆம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் உலக புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு, இடம்பெயர்ந்த மற்றும் புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது Save The Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் குறிப்பாக கிரீஸ், இத்தாலி, பின்லாந்து, ஸ்பெயின் மற்றும் போலந்து எல்லைகளில் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அங்குள்ள குழந்தைகளின் நிலையை ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது அந் நிறுவனம்.
இந்த அறிக்கைக்காக நேர்காணல் செய்யப்பட்ட இளைஞர்கள், ஐரோப்பாவில் தாங்கள் அனுபவித்த துப்பாக்கிச் சூடு, வன்முறை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலை உள்ளிட்ட கடுமையான சூழல்களை எதிர்கொண்டதாகப் பகிர்ந்துகொண்டனர் என்றும் அந்நிறுவனம் உரைத்துள்ளது.
உலக புலம்பெயர்ந்தோர் தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பாகவே, குழந்தைகள் மற்றும் இளம் வயது மாணவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதை வலியுறுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது இந்நிறுவனம்.
ஐரோப்பிய ஒன்றியங்கள் இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், சிறுவர்களுக்கும், குறிப்பாக தனிமையில் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதில் பின்னடைவு அடைய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது அந்நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்