போரினால் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
உலகளவில் ஏறக்குறைய 12 கோடியே 20 இலட்சம் மக்கள் போரினால் இடம்பெயர்ந்துள்ளனர் என்று UNHCR எனப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனமானது வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
பன்னாட்டு உறவுகளில் தீவிரமான நிலையற்ற தன்மை கொண்ட காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்றும், நவீன போரானது, கடுமையான மனித துன்பங்களால் குறிக்கப்பட்ட ஒரு பலவீனமான மற்றும் வேதனையான நிலப்பரப்பை உருவாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளார் புலம்பெயர்ந்தோருக்கான ஐ.நா. உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி.
அமைதியைத் தேடுவதற்கும், புலம்பெயர்ந்தோர் மற்றும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மற்றவர்களுக்கு நீடித்த தீர்வுகளைக் கண்டறிவதற்கான நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ஆணையர் கிராண்டி.
போர் மற்றும் மோதல்களால் தங்கள் சொந்த நாடுகளுக்குள் இடம்பெயர்ந்தவர்கள், 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 63 இலட்சத்திலிருந்து தற்போது 7 கோடியே 35 இலட்சமாக அதிகரித்துள்ளனர் என்றும், உலகின் மிகப்பெரிய புலம்பெயர்வைக் கொண்ட சூடான் உட்பட, சிரியா, ஆப்கானிஸ்தான் உக்ரைன் மக்களும் இவர்களுள் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளார்.
நாம் ஒரு சிக்கலான வரலாற்றுக் காலகட்டத்தைக் கடந்து செல்கிறோம், இதில் மோதல்களின் பரவல் மனித பாதிப்பை வெளிப்படுத்துகிறது என்றும், சந்தேகம் மற்றும் அலட்சியத்தால் திணரும் நேரத்தில் மற்றவர்களின் துயரமானது நமக்கு வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் அது நம்மை நெருக்கமாகத் தொடுகிறது என்றும் தெரிவித்துள்ளார் இத்தாலியில் உள்ள UNHCR பிரதிநிதி கியாரா கார்தோலெத்தி.
உலகின் வெறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம் என்று எடுத்துரைத்த கோர்தோலெத்தி அவர்கள், மனிதாபிமான அவசரநிலைகள் போதுமான பதில்களைப் பெறாதபோது, அதன் விளைவுகள் மனித துன்பத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிக உறுதியற்ற தன்மையையும் உருவாக்குகின்றன என்றும் கூறியுள்ளார்.
மனிதாபிமான உதவிகளைக் குறைப்பது அதிகமான மக்களை விரக்தியில் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்றும், ஐரோப்பா மற்றும் இத்தாலி உட்பட அனைவரையும் எதிர்கால நெருக்கடிக்கு உட்படுத்துகின்றது என்றும், நம்மை ஆபத்திற்கு இட்டுச்செல்லும் இந்த வட்டத்தை நாம் உடைத்தெரிய வெண்டும் என்றும் கூறியுள்ளார் கோர்தொலெத்தி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்