இளையோர் மற்றும் சிறாருக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும
மெரினா ராஜ் - வத்திக்கான்
இளைஞர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு எதிரான துன்பங்கள் மற்றும் வன்முறை சூழ்நிலைகள் அதனைத் தீர்ப்பதற்காக விரைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன என்றும், சிறார்களின் குரலுக்கு செவிசாய்த்தல், அவர்களின் அனுபவங்களையும் கண்ணோட்டத்தையும் சேகரித்தல் அவசியம் என்றும் எடுத்துரைத்துள்ளார் ரஃபேலா மிலானொ.
மே 6, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள சேவ் த சில்ரன் அமைப்பின் இயக்குநர் ரஃபேலா மிலானொ அவர்கள், இளையோர்க்கு எதிரான வன்முறைக்கு அடிப்படையான காரணிகளும் அதன் வெளிப்பாடுகளும் வேறுபட்டவை. எனவே அதை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரே ஒரு 'செயல்முறை' மட்டும் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பங்கள் மற்றும் பள்ளிகளின் பங்கை ஆதரிப்பது அவசியம், வன்முறையற்ற கல்வியை ஊக்குவிப்பது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ள ரஃபேலா மிலானோ அவர்கள், சிறாரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள அவர்களுடன் நேரம் ஒதுக்கி கலந்துரையாடல் செய்வது மிக முக்கியமானது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
பல சிறுவர் சிறுமிகள் தங்கள் அன்றாட வாழ்வில் வன்முறையை உடனடியாக ஒரு பிரச்சனையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், சிலர் பாதுகாப்பின்மையையும், ஆரோக்கியமான மனித உறவுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் ரஃபேலா.
உணர்வுப்பூர்வமான கல்விச் செயல்பாடுகள், ஆரோக்கியமான மனித உறவுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்பிக்கிறது என்றும், வன்முறைச் செயல்கள் நிறுவனங்களை ஒடுக்குவதை சட்டப்பூர்வமாக்குவதால், வன்முறையின் சுழற்சியைத் தூண்டுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் ரஃபேலா.
நேரில் மட்டுமல்லாது சமூக ஊடகங்களிலும் ஒவ்வொரு வகையான வன்முறையைப் பற்றி அதிகம் பேசுவதை ஊக்குவிப்பவர்கள் உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள ரஃபேலா அவர்கள், சமூக ஊடகங்களில் இடம்பெறும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரங்கள் மக்களின் லைக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே உள்ளன என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்