சீனாவின் இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி!
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
மே-27, இச்செவ்வாயன்று, சீனாவின் சாண்டோங் மாநிலத்தில் உள்ள காவோமி என்ற நகரத்தில் இயங்கும் யோடாவ் இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அந்நாட்டின் சின்ஹுவா எனப்படும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து தென்கிழக்கே ஏறக்குறைய 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இரசாயனத் தொழிற்சாலையில் நண்பகல் 12 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் ஏற்பட்ட தீயில் தொழிற்சாலையின் ஜன்னல்கள் வெடித்து சிதறியதாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு 55 அவசர கால ஊர்திகளையும், 232 மீட்புப் பணியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் கூறியுள்ளது.
குறைந்த நச்சுத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் யோடோவ் இரசாயனத் தொழிற்சாலை, 116 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது என்றும், ஏறத்தாழ 300 பணியாளர்கள் அங்குப் பணியாற்றுகின்றனர் என்றும் அச்செய்திக் குறிப்பு எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்