MAP

காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள்  (ANSA)

உலகில் மிகவும் மாசுகேடடைந்த நகர்கள் ஆசியாவில்

N’Djamena நகருக்குப்பின் உலகின் இரண்டாவது மாசுக்கேடடைந்த நகராக பங்களாதேஷ் நாட்டின் தலைநகர் டாக்கா இருப்பதாகக் கூறும் அறிக்கை, முதல் 20 நகர்களில் 13 இந்தியாவில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகில் மிகவும் காற்று மாசுக் கேடடைந்த நகர்களுள் பெரும்பாலானவை ஆசியாவில் இருப்பதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உலகில் மிகவும் மாசுக் கேடடைந்த முதல் 20 நகர்களுள் 19 இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா மற்றும் காசாகிஸ்தானில் இருப்பதாகவும், உலகின் மிகவும் பெரிய அளவில் மாசுக்கேடடைந்த நகரமாக, மத்திய ஆப்ரிக்காவிலுள்ள சாட் நாட்டின் தலைநகர் N’Djamena இருப்பதாக IQAir என்ற அமைப்பு வெளியிட்ட அண்மை அறிக்கை தெரிவிக்கிறது.

N’Djamena நகருக்குப்பின் உலகின் இரண்டாவது மாசுக்கேடடைந்த நகராக பங்களாதேஷ் நாட்டின் தலைநகர் டாக்கா இருப்பதாகக் கூறும் இவ்வறிக்கை, முதல் 20 நகர்களில் 13 இந்தியாவில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

முதல் 20 நகர்களில் 4 பாகிஸ்தானில் இருப்பதாகவும், சீனாவில் ஒன்றும், காசாகிஸ்தானில் ஒன்றும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாரிதாபாத், லோனி, டெல்லி, குருகிராம், நோய்டா போன்றவை அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் இவ்வறிக்கை, மாசுக்கேட்டைக் கட்டுப்படுத்துவதில் சீனா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருவதாகவும் தெரிவிக்கிறது.

அண்மை ஆய்வுகளின்படி, காற்று மாசுக்கேடு என்பது மூச்சுக் குழாய் பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்று நோய், இதய நோய், மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்றவைகளுக்கு காரணமாகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மார்ச் 2025, 13:35