MAP

சகிப்புத்தன்மையை ஊக்குவிப்போம் சகிப்புத்தன்மையை ஊக்குவிப்போம்  (All rights reserved)

Uzbekistan நாட்டில் மத நம்பிக்கைகளை மதிக்கும் புதிய சட்டம்

உஸ்பேகிஸ்தான் நாட்டில் உயர் கல்வி 7 மொழிகளில் வழங்கப்படுவதுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 12 மொழிகளில் இடம்பெறுகின்றன, 14 மொழிகளில் பத்திரிகைகள் வருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

Uzbekistan நாட்டில் மனச்சான்றின் சுதந்திரம் மதிக்கப்படுவதை உறுதிச் செய்யவும், குடிமக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கவும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ள அந்நாட்டு அரசுத்தலைவர், தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அதில் இணைத்துள்ளார்.

எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் சாராமல் அனைத்து மதங்களையும் மதிக்கும் உஸ்பெகிஸ்தான் நாட்டின் அரசுத் தலைவர் Shavkat Mirziyoyev அவர்கள் கையெழுத்திட்டுள்ள புதிய சட்டம், அரசு அமைப்புக்களுக்கும் மதங்களுக்கும் இடையேயான உறவை வளர்க்கவும், மத சகிப்புத் தன்மையை ஊக்குவிக்கவும், ஒருவர் ஒருவரிடையே ஒருமைப்பாட்டிற்கு உதவவும், மதங்களிடையே உரையாடலை வளர்க்கவும் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத தீவிரவாதத்தை நோக்கிய போக்குகள் பலமாக எதிர்க்கப்படும் எனவும், அழிவு தரும் கொள்கைகளைப் பரப்புவது தடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும், தகவல் தொடர்புத் துறையில் தீவிரவாதக் கொள்கைகள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பவைகளை இப்புதியச் சட்டம் உறுதிச் செய்கிறது.

அனைத்து மதங்களிடையே இணக்க வாழ்வை ஊக்குவிக்கவும், வருங்காலத்தில் அமைதியையும் நிலையான தன்மையையும் உறுதி செய்யவும் உதவும் இந்த புதிய சட்டத்திற்கு உஸ்பெகிஸ்தானின் அனைத்து மதங்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

தற்போது உஸ்பெகிஸ்தான் நாட்டில் 16  மதங்களைச் சேர்ந்த 2300 மத இயக்கங்கள் செயல்படுகின்றன. இந்நாட்டில் உயர் கல்வி 7 மொழிகளில் வழங்கப்படுவதுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 12 மொழிகளில் இடம்பெறுகின்றன, இந்நாட்டில் 14 மொழிகளில் பத்திரிகைகள் வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 மார்ச் 2025, 14:06