MAP

புலம்பெயர்ந்து செல்லும் சிரியா மக்கள் புலம்பெயர்ந்து செல்லும் சிரியா மக்கள்   (ANSA)

சிரியாவில், உணவும் தண்ணீருமின்றி தவிக்கும் 1 கோடியே 60 இலட்சம் மக்கள்

சிரியாவில் உணவும் தண்ணீரும் இன்றி 1 கோடியே 60 இலட்சம் சிரியர்கள் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிரியாவில் தற்போதைய மனிதாபிமான நெருக்கடி காரணமாக, மக்கள் தொகையில் ஏறக்குறைய 1 கோடியே 60 இலட்சம் பேர் உணவு, தண்ணீர், தங்குமிடம், நலவாழ்வுப் பராமரிப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளை அணுக முடியாமல் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 14 ஆண்டுகால மோதலுக்குப் பிறகு, 1 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், டிசம்பரில் அரசுத் தலைவர் பஷார் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு 3,50,000 புலம்பெயர்ந்தோர் திரும்பி வந்தாலும், அங்கு நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதாகவும் உரைத்துள்ளது அந்நிறுவனம்.

74 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், மேலும் நாடு பரவலான அழிவு, பொருளாதார நெருக்கடி மற்றும் அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.

கூடுதலாக, சிரிய அதிகாரிகள், தாராவில் அண்மையில் நிகழ்ந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்தனர் என்றும், இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்றும் உரைக்கும் அந்நிறுவனம், இது சிரியாவின் இறையாண்மை மற்றும் அனைத்துலகச் சட்டத்தை மீறுவதாக இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மார்ச் 2025, 14:30