ஐந்து ஆண்டுகளாக 13 கோடி சிறாருக்கு கல்வியில்லை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் கல்வியை நிறுத்திய சிறுவர் சிறுமிகளுள் 13 கோடி பேர் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கல்வி நிலையங்களுக்குச் செல்லாமலேயே இருப்பதாக Save the Children பிறரன்பு அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.
கோவிட் காலத்தில் பள்ளியை விட்ட இவர்கள் 22 நாடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளிக்குச் செல்லாமலேயே இருப்பதாகக் கூறும் இந்த அமைப்பு, 13 கோடி சிறாரின் வருங்காலம் இதனால் கேள்விக்குறியாகியுள்ளது எனவும் தெரிவிக்கிறது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் இரண்டாண்டுகளுக்கு பள்ளிகள் மூடியிருந்ததாகவும், அதன்பின்னர் சில நாடுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் 13 கோடி சிறார் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளஞ்சிறார் மற்றும் சிறுமிகளின் வருங்காலத்தை வளமாக்க கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துவரும் Save the Children அமைப்பு, கோவிட் காலத்தில் மூடப்பட்ட பல கல்வி நிலையங்கள், அதனைத் தொடர்ந்து வந்த வெள்ளப்பெருக்கு மற்றும் வெப்பக்காற்று காரணமாக பிலிப்பீன்ஸ், ஹொண்டூராஸ், பங்களாதேஷ் மற்றும் மெக்சிகோவில் தொடர்ந்து மூடப்பட்டே இருப்பதாகத் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்