MAP

மருத்துவர் Vincenzo Trapani Lombardo மருத்துவர் Vincenzo Trapani Lombardo 

பிறருக்காக உழைக்கும் எண்ணம் கொண்ட தன்னார்வலர்கள்

தன்னார்வத் தொண்டு என்பது நன்கொடையின் செயல் மட்டுமல்ல மாறாக, உண்மையான மனித பரிமாற்றம். இது பெறுபவர்களையும் உதவி வழங்குபவர்களையும் வளப்படுத்துகிறது - மருத்துவர். வின்சென்சோ

மெரினா ராஜ் - வத்திக்கான்

தன்னார்வத்தொண்டு என்பது மற்றவர்களுக்கு உதவுவதற்காக வெளியே செல்வது என்றும், திறந்த இதயம், உதவத்தயாராக இருக்கும் கரங்கள், விரைந்து செல்லத் தயாராக இருக்கும் கால்கள் போன்றவற்றைக் கொண்டவர்களாக தன்னார்வலர்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறினார் மருத்துவர் Vincenzo Trapani Lombardo

மார்ச் 8, 9 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வத்திக்கானில் நடைபெற இருக்கும், அரசு சாரா தொண்டு அமைப்புக்களும், தன்னார்வப் பணியாளர் அமைப்புக்களும் கலந்துகொள்ளும் யூபிலிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு எடுத்துரைத்தார் தன்னார்வலரும் மருத்துவருமான  Vincenzo Trapani Lombardo

எப்போதும் பிறருக்கு உதவத் தயாராக இருக்கும் தன்னார்வலர்கள் ஒருபோதும் தங்களுக்குள் முடங்கிக்கிடப்பது கிடையாது என்றும், செயலற்ற நிலையிலிருந்து செயலுள்ள செயலாக மற்றவர்களின் வாழ்க்கையில் உதவுவதற்காக, சுறுசுறுப்பான மற்றும் தாராளமான ஈடுபாட்டிற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்றும் கூறினார் வின்சென்சோ.

இரத்தவியல் மருத்துவரான வின்சென்சோ அவர்கள், ரேஜியோ கலாபிரியா பகுதியைச் சார்ந்தவர். யுனிதால்சி என்னும் இத்தாலிய பிறரன்பு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நீண்ட காலமாகப் பணியாற்றி வருபவர். குறிப்பாக பெருந்தொற்றுக் காலத்தில் தேவையில் இருக்கும் மக்களுக்கு பணியாற்றியவர்.

தன்னார்வத் தொண்டு என்பது நன்கொடையின் செயல் மட்டுமல்ல மாறாக, உண்மையான மனித பரிமாற்றம் என்றும், இது பெறுபவர்களையும் உதவி வழங்குபவர்களையும் வளப்படுத்துகிறது என்றும் எடுத்துரைத்தார் வின்சென்சோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மார்ச் 2025, 14:41