உக்ரைனில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர், 6 குழந்தைகள் காயமடைந்தனர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனில் குழந்தைகளின் வாழ்க்கை சிதைந்து வருகிறது என்றும், பலர் தொடர்ச்சியான தாக்குதல்களால் தொடர்த் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும் பெரும் கவலை தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம்.
மார்ச் 12, இப்புதன்கிழமையன்று, தனது எக்ஸ்தள பக்கத்தில் இத்தகவலை வழங்கியுள்ள அந்நிறுவனம், குழந்தைகளுக்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது.
டொனெட்ஸ்க் பகுதியில் மார்ச் 11, இச்செவ்வாய்க்கிழமையன்று நடந்த தாக்குதலில், 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு சகோதரக் குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்றும், கூடுதலாக, கடந்த சில நாள்களில் பல்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் ஆறு குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்