காங்கோவில் இடம்பெறும் மோதலில் 7,000 பேர் உயிரிழப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த ஜனவரி மாதம் முதல், காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதலில் 7,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்நாட்டின் பிரதமர் பிரதமர் ஜூடித் சுமின்வா தெரிவித்துள்ளார்.
கோமாவில் 3,000 பேர் இறந்ததாகவும், மேலும் 2,500-க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்டன என்றும் கூறியுள்ள அதேவேளையில், M23 கிளர்ச்சிக் குழுவை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட ருவாண்டா மீதானத் தடைகள் உட்பட அனைத்துலக நடவடிக்கையையும் வலியுறுத்தியுள்ளார் பிரதமர் சுமின்வா.
மேலும் கோமா, புகாவு உள்ளிட்ட முக்கிய நகரங்களை இக்குழு கைப்பற்றியுள்ள வேளை, அப்பகுதியில் வன்முறை போராக விரிவடையும் என்றும், இதனால் ஏறத்தாழ 40,000 பேர் அண்டை நாடான புருண்டிக்குப் புலம்பெயர்ந்து செல்லக்கூடும் என்று எச்சரித்துள்ளார் ஐ.நா-வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்.
M23 என்ற கிளர்ச்சிக் குழு ருவாண்டா வீரர்களின் ஆதரவுடன் காங்கோ ஜனநாயகக் குடியரசின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளின் கட்டுப்பாட்டிற்காகப் போராடுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்