காசா பகுதியில் போர்நிறுத்தத்தை வரவேற்றுள்ளது யுனிசெஃப் நிறுவனம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசா பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வரவேற்றுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
ஜனவரி 16, வியாழன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை ஒன்றில் இந்தப் போர்நிறுத்தத்தை பெரிதும் வரவேற்பதாகக் கூறியுள்ள அந்நிறுவனம், போரின்போது, ஏற்பட்ட உயிர் இழப்பு, இடம்பெயர்வு மற்றும் பிரிவினை உள்ளிட்ட கடுமையான துன்பங்களைச் சந்தித்த குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவவேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.
இந்த மோதலில் குறைந்தது 14,500 பேர் இறந்துள்ளனர், 17,000 குழந்தைகள் காப்பாளர்கள் இல்லாமல் உள்ளனர் என்று அதன் அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ள அந்நிறுவனம், இப்போரினால் இதுவரை 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ள அதேவேளையில், உடல்நலம், நீர் வழங்கல் மற்றும் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்