காசாவில் உயிர் பிழைத்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஐநா!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இஸ்ரேலிய படைகள் மற்றும் பாலஸ்தீனிய குழுக்களின் தொடர்ச்சியான அழிவுச்செயல் மற்றும் சீர்குலைவு காரணமாக காசாவில் அதன் மனிதாபிமான முயற்சிகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் குடிமக்களைப் பாதுகாக்க முடியாத அல்லது பாதுகாக்க விரும்பாத நிலையில், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைப் பொதுச்செயலாளர் டாம் ஃபிளெட்சர் அவர்கள், குடிமுறைக்குரிய ஒழுங்கின்மை மற்றும் உதவி பாதுகாப்புக் குழுக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை எடுத்துரைத்துள்ளார்.
மேலும் இஸ்ரேலிய அதிகாரிகள் ஐ.நா-வின் பணியாளர்களைத் தாக்கி அறிக்கைகளில் அவதூறு செய்வதையும் விமர்சித்துள்ளார் பிளெட்சர்.
மற்றொரு செய்தியில், புதிய மத்திய கிழக்கு தூதருக்கான ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தெரெஸ் அவர்களின் பேராளான முன்னாள் ஃபின்னிஷ் வெளியுறவு மந்திரி பெக்கா ஹாவிஸ்டோவை இஸ்ரேல் அரசு தடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பற்றிய அவரது கடந்தகால விமர்சன அறிக்கைகள் மற்றும் இரு நாடுகளின் தீர்வுக்கான அவரது ஆதரவு காரணமாக இஸ்ரேல் ஹவிஸ்டோவை எதிர்க்கிறது என்றும் உரைக்கிறது ஐநா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்