MAP

லெபனோனில் அடைக்கலம் தேடியுள்ள சிரியா குழந்தைகள் லெபனோனில் அடைக்கலம் தேடியுள்ள சிரியா குழந்தைகள்  (AFP or licensors)

பெருமளவில் சிரிய அகதிகள் சொந்த நாடு திரும்பல்

கடந்த 14 ஆண்டு சிரியா மோதல்களால் 70 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்துள்ளனர், 60 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்மை நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சிரியா நாட்டில் Bashar al-Assad அவர்களின் ஆட்சி கவிழ்ந்ததிலிருந்து இதுவரை ஏறக்குறைய 2 இலட்சம் பேர் தங்கள் சொந்த நாட்டிற்குள் திரும்பியுள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவிக்கிறது.

அகதிகளுக்கான ஐ.நா. உயர்மட்ட அவையின் தலைவர் பிலிப்போ கிராந்தி அவர்களின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஜனவரி 16ஆம் தேதிக்கும் இடைப்பட்டக் காலத்தில் 1,95,200 பேர் நாட்டிற்குள் திரும்பிவந்துள்ளதாகத் தெரிகிறது.

2024ஆம் ஆண்டு மொத்தமாக சிரியாவிற்குள் நுழைந்த அந்நாட்டு மக்கள் ஏறக்குறைய 5 இலட்சம் எனவும், இதில் பெரும்பான்மையினோர் இலபனோனில் வாழ்ந்தவர்கள் எனவும், ஹெஸ்பொல்லாவிற்கு எதிரான இஸ்ராயேலின் தாக்குதலிலிருந்து தப்பிக்க இவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளதகாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள் மற்றும் நெருக்கடிகளால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், 70 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்துள்ளனர், 60 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்மை நாடுகளான துருக்கி, இலபனோன், ஜோர்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜனவரி 2025, 13:16