MAP

கர்தினால் JACOB KOOVAKAD கர்தினால் JACOB KOOVAKAD  

அனைத்து மக்களிடையே ஒளியையும் நட்பையும் உருவாக்குவோம்

உள்ளார்ந்த மனித மாண்பு, பொது நன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி, இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின்னர் வெளியான Nostra Aetate அறிக்கை, நட்புறவிற்கான சுரங்கப்பாதை ஆகியவை குறித்தக் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார் கர்தினால் கூவக்காடு

மெரினா ராஜ் – வத்திக்கான்

நம்பிக்கைக் குழுக்களுக்கு இடையிலான இந்த "நட்பின் சுரங்கப்பாதை" உரையாடல் மற்றும் சந்திப்பிற்கான நேரமாகவும் இடமாகவும் இருக்க வேண்டும் என்றும், நாம் ஒரே மக்களாகக் கூடி ஒரே மக்களாகப் பேசுவோம், வங்காளத்தின் அனைத்து மக்களிடையேயும் ஒளியையும் நட்பையும் உருவாக்குவோம், இருளை அகற்றுவோம், நமது பொதுவான பயணத்தில் நல்லிணக்கத்தை வளர்ப்போம் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் ஜோசப் ஜேக்கப் கூவக்காடு.

செப்டம்பர் 6, சனிக்கிழமை வங்காள தேசத்தின் ஆயர்பேரவை தலைவர்கள் மற்றும் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆகியோரைச் சந்தித்தபோது இவ்வாறு எடுத்துரைத்தார்  பல்சமய உரையாடல் திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்துவது போல “ஒரு மறைப்பணி திருஅவையாக, இணைப்பின் பாலங்களைக் கட்டுகின்ற, உரையாடலை ஊக்குவிக்கும் ஒரு திருஅவையாக நாம் இருக்க வேண்டும்” என்றும்,  எல்லாரையும் வரவேற்கின்ற, எப்போதும் திறந்திருக்கின்ற ஒரு திருஅவையாக நாம் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கூவக்காடு.

மதங்களுக்கிடையேயான பல்சமய உரையாடலின் பலன் திருப்பீடத்திற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தட்டும் என்று கூறிய கர்தினால் கூவக்காடு அவர்கள், உரையாடலின் விளைவுகள் அல்லது பலன் மக்களிடையே ஆழமான நல்லிணக்கத்தை மட்டுமே கொண்டு வர முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

உள்ளார்ந்த மனித மாண்பு, பொது நன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி, இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின்னர் வெளியான Nostra Aetate அறிக்கை, நட்புறவிற்கான சுரங்கப்பாதை ஆகியவை குறித்தக் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார் கர்தினால் கூவக்காடு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 செப்டம்பர் 2025, 13:22