பனிமய அன்னையின் ஆண்டுப் பெருவிழா
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
கடவுளின் தாயான அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாப்பிறை பேராலயத்தின் திருவிழா நாளில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் ஆசீரையும் வாழ்த்துக்களையும், கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத்துறையின் நேரடிப் பொதுச்செயலர் பேராயர் Edgar Peña Parra.
இந்நாளில், அன்னை மரியாவின் பாடலைப் பாடும் போது ஆயிரக்கணக்கான வெள்ளை ரோஜா இதழ்கள் கோபுரத்திலிருந்து விழும் நிகழ்வு 358-ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு பழமையான பாரம்பரிய நிகழ்வாகும் என்றும் தெரிவித்துள்ளார் பேரருட்திரு Edgar Peña Parra.
அன்று, கோடையின் நடுவில் பனிப்பொழிவின் அசாதாரண நிகழ்வு, எதிர்காலத்தில் அமையப்போகும் அன்னை மரியா ஆலயத்தின் சுற்றளவைக் கண்டறிந்தது மட்டுமல்லாமல், அதுவரை நகரத்தின் பாதுகாப்பற்ற மற்றும் அவமதிப்புக்குரிய பகுதியாக இருந்த எஸ்குவிலின் மலையயைப் படிப்படியாக அன்னை மரியின் புகழ் பரப்பும் இடமாகவும் மாற்றியது என்றும் பேரருட்திரு Edgar Peña Parra எடுத்துரைத்துள்ளார்.
மேலும், 5ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற எபேசியத் திருச்சங்கம் அன்னை மரியாவை கடவுளின் தாய் என்ற அறிவித்ததைக் கொண்டாடும் விதமாக இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு பேராலயமாக உயர்த்தப்பட்டு புனித மரிய மஜோர் என்று அழைக்கப்பட்டு வருவதாகவும், அன்றிலிருந்து, பல நூற்றாண்டுகளாக, தொடர்ந்து புதிய அலங்காரங்களால் வளப்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார் பேரருட்திரு Edgar Peña Parra.
"நான் ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்திற்கும் முன்னும், பயணம் முடிவடைந்த பின்னும் இங்கு வந்து இறைவேண்டல் செய்து மாசற்ற அன்னையிடம் என்னை ஒப்புக்கொடுத்தேன்; அவ்வாறே என் கடைசி உலக பயணம் இப்புனிதக் கோயிலில் முடிவடைய வேண்டும்" என்ற முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் பேரருட்திரு Edgar Peña Parra நினைவு கூர்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்