MAP

ஒப்புரவு செப வழிபாட்டுக் கையேடு ஒப்புரவு செப வழிபாட்டுக் கையேடு  

10,000 ஒப்புரவு செபவழிபாட்டுக் கையேடுகள் விநியோகம்

சாம்பியா, அங்கோலா, வியட்நாம், டோகோ மற்றும் பிரேசில் நாடுகளின் அறக்கட்டளையைச் சேர்ந்த இருபது தன்னார்வலர்கள், மற்றும் பல சலேசிய சபை அருள்கன்னியர்களுடன் இணைந்து ஒப்புரவு அருளடையாளம் பெற உதவுவதற்கான இக்கையேட்டினை இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கினர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இளைஞர்களுக்கான யூபிலி நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமை உரோமின் சிர்கோ மாசிமோ வளாகத்தில் இளைஞர்களுக்கான ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் வழிபாடானது நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்கு உதவும் வகையில் Youcat என்ற செபவழிபாட்டுக் கையேடானது ஏறக்குறைய 10,000 பிரதிகள் வழங்கப்பட்டன.

சாம்பியா, அங்கோலா, வியட்நாம், டோகோ மற்றும் பிரேசில் நாடுகளின் அறக்கட்டளையைச் சேர்ந்த இருபது தன்னார்வலர்கள், பல சலேசிய சபை அருள்சகோதரிகளுடன் இணைந்து ஒப்புரவு அருளடையாளம் பெற உதவுவதற்கான இக்கையேட்டினை இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கினர்.

இத்தாலியம், ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் தயாரிக்கப்பட்ட இச்சிறப்பு யூபிலி பதிப்பினை இளைஞர்கள் நன்முறையில் பயன்படுத்தினர்.

ஏறக்குறைய 10 மொழிகளில் இளைஞர்கள் பாவ மன்னிப்பு பெறுவதற்கான 200 பாவ மன்னிப்பு வழங்கும் இடங்கள் சிர்கோ மாசிமோ வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஆகஸ்ட் 2025, 11:08