MAP

சிர்கோ மாசிமோ வளாகம் சிர்கோ மாசிமோ வளாகம்   (ANSA)

கடவுளின் அரவணைப்பை மிக உறுதியாக உணரும் ஒப்புரவு அருளடையாளம்

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வரும் இளைஞர்களுக்கான யூபிலி நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமை சிர்கோ மாசிமோ வளாகத்தில் ஒப்புரவு செப வழிபாடு நடைபெற்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஒப்புரவு அருளடையாளம் வழியாகக் கடவுளின் அரவணைப்பை மிக உறுதியாக உணர்ந்தோம் என்றும், ஏராளமான மக்கள் வாழும் உரோம் நகரில் அமைதியான ஓர் இடத்தில் முழுமையாகக் கடவுளின் இருப்பை உணர முடியும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் பகிர்ந்து கொண்டார் மிரியம்.

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வரும் இளைஞர்களுக்கான யூபிலி நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமை சிர்கோ மாசிமோ வளாகத்தில் நடைபெற்ற ஒப்புரவு செப வழிபாட்டில் பங்கேற்றது குறித்த கருத்துக்களை வத்திக்கான் செய்திகளிடத்தில் பகிர்ந்து கொண்டார் மார்கே பகுதியைச் சார்ந்த திருப்பயணி மிரியம்.

பல வேறுபட்ட நாடுகளிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் அனைவரும், ஒரு பெரிய குடும்பமாக ஒன்றாக இருக்கின்றோம் என்றும், இதனால் உண்மையிலேயே முழு உலகத்திற்கும் அமைதிக்கான நம்பிக்கையின் அடையாளமாக நம்மால் இருக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார் டெக்சாசைச் சார்ந்த மேத்யூ.

ஒவ்வொரு ஆசீரும், ஒரு புதிய வாழ்க்கையின் முதல் நாள் என்பதை இந்த நாள்களில் அதிகமாக உணர்வதாக எடுத்துரைத்தார் 29 வயதான தெற்கு இத்தாலியில் உள்ள ஃபோகியாவைச் சேர்ந்த மார்டினா.

 மிக இளமையான மற்றும் சமமான உணர்திறன் கொண்ட இதயங்களில் எரியும் நெருப்பை இந்நாள்களில் விவரிக்க முடிகிறது என்றும், கடவுளுக்கான பெரும் தேவை, நிச்சயமற்றதன்மை மற்றும் குழப்பத்தால் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில் நம்பிக்கைக்கான தேடல் இளைஞர்களுக்கு மிகவும் தேவை என்றும் வலியுறுத்தினார் அருள்பணியாளர் மார்க் டெஸ்டுரா.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஆகஸ்ட் 2025, 11:04