MAP

கர்தினால் பியர்பத்திஸ்தா பிட்சாபால்லா. கர்தினால் பியர்பத்திஸ்தா பிட்சாபால்லா.  (AFP or licensors)

நம்பிக்கை, நன்மையைக் கட்டியெழுப்பும் விருப்பத்தை உருவாக்கும் செபம்

போரினால் மக்கள் துன்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நாம் செய்யக்கூடிய ஒரே செயல், செபித்து நோன்பிருந்து, கடவுளின் மீது நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவது

மெரினா ராஜ் - வத்திக்கான்

செபத்தின் ஆற்றலானது மக்களின் இதயங்களை நம்பிக்கைக்கும், நன்மையைக் கட்டியெழுப்புவதற்கான விருப்பத்திற்கும் திறக்கின்றது என்றும், அமைதியும் நீதியும் சாத்தியமற்றது என்று தோன்றும் இடங்களில் கூட செபத்தின் ஆற்றல் மிகச்சிறப்புடன் செயல்படுகின்றது என்றும் கூறினார் கர்தினால் பியர்பத்திஸ்தா பிட்சாபால்லா.

ஆகஸ்டு 22, வெள்ளிக்கிழமை அரசியான தூய கன்னி மரியாவின் திருவிழாவன்று உலக நாடுகளில் உள்ள மக்களுக்கு அமைதி மற்றும் நீதி கிடைக்கப்பெற வலியுறுத்தி அந்நாளை செப நாளாக திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கடைபிடிக்கக் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அதனை முன்னிட்டு எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா அவர்கள் வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அமைதியின் கருப்பொருளில் திருத்தந்தை கவனம் செலுத்தியதற்கு மக்கள் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருப்பதாகத் தெரிவித்த கர்தினால் பிட்சாபால்லா அவர்கள், இது மிகவும் நுட்பமான பிரச்சினை, இதயங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றும், செபம் மற்றும் நோன்பிற்கான நாளுக்காக  நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வது இது முதல் முறை அல்ல; அவை கடந்த காலங்களிலும் அதிகமாக செய்யப்பட்டன என்றும் எடுத்துரைத்தார்.

போரினால் மக்கள் துன்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நாம் செய்யக்கூடிய ஒரே செயல், செபித்து நோன்பிருப்பது, கடவுளின் மீது நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவது என்றும், இச்செயல்களே, போரில் ஈடுபடும் மனிதர்களின் இதயங்களை மாற்றுவதற்கான ஒரே வழி, புனித பூமியிலும் மனித இதயங்களை மாற்றுவதற்கான வழி என்றும் கூறினார்.

செபத்தினை நமது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு மந்திர சூத்திரம் போல் எண்ணக்கூடாது என்று வலியுறுத்திய கர்தினால் பிட்சாபால்லா அவர்கள், செபம் நம் இதயங்களை மாற்ற உதவுகிறது என்றும், குறிப்பாக போராலும் அமைதியின்மையாலும் உருவாக்கப்பட்ட வெறுப்பு மற்றும் நிராகரிப்பு சூழல் நிறைந்த உலகில், மனிதர்களின் நல் இதயங்களைத் திறக்க உதவுகிறது என்றும் தெரிவித்தார்.

நம்பிக்கைக்கும், நன்மை செய்ய வேண்டும் என்ற விருப்பத்திற்கும், நன்மையை உருவாக்குவதற்கும் எப்போதும் நம் இதயத்தை நாம் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும், இறப்பு மற்றும் வன்முறையால் பேரழிவிற்குள்ளான இடத்தில் வாழும் மக்களுக்கு செபம் மற்றும் நோன்பிற்கான நாள் ஆதரவையும் அமைதியையும் அளிக்கும் என்றும் குறிப்பிட்டார் கர்தினால் பிட்சாபால்லா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஆகஸ்ட் 2025, 09:58