கிழக்கு ஆப்ரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளும் கர்தினால் பரோலின்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கிழக்கு ஆப்ரிக்காவின் புருண்டி பகுதிக்கு ஆகஸ்டு மாதம் 12 முதல் 18 வரை பயணம் மேற்கொள்கின்றார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
கிழக்கு ஆப்ரிக்கா நாட்டிற்கான திருத்தந்தையின் அரசுத்தூதர் பேராயர் Michael Aidan Courtney அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 23 ஆண்டு நினைவை முன்னிட்டு அங்குள்ள உள்ளூர் தலத்திருஅவையினரால் அவ்விடத்திற்கு அழைப்பு பெற்றிருக்கின்றார் கர்தினால் பரோலின்.
பேராயரின் 23- ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது நினைவுச்சின்னத்தை திறந்து வைப்பதற்காகவும், அங்குள்ள நலவாழ்வு மையம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவிற்காகவும் புருண்டி பகுதிக்குச் செல்ல இருக்கின்றார் கர்தினால் பரோலின்.
இதன்வழியாக புருண்டி தலத்திருஅவைக்கும் திருஅவைக்கும் இடையிலான 60 ஆண்டுகால உறவை உறுதி செய்வதற்காகவும் இந்த யூபிலி ஆண்டினை சிறப்புச் செய்வதற்காகவும் இப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்