99 வயது அர்ஜெண்டினா கர்தினால் ஸ்தனிஸ்லாவ் கார்லிக் மறைவு
மெரினா ராஜ் – வத்திக்கான்
தூய அகுஸ்தீன் சபையைச் சார்ந்தவரும் அர்ஜெண்டினாவின் பரானா உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயருமான கர்தினால் ஸ்தனிஸ்லாவ் எஸ்ட்பன் கார்லிக் (Estanislao Esteban Karlic) அவர்கள் தனது 99வயதில் ஆகஸ்டு 8 வெள்ளிக்கிழமையன்று இறைபதம் சேர்ந்தார்.
"மிகப்பெரிய எளிமை குணம் கொண்டவரும், "மகத்தான இரக்க குணம் உடையவருமான கர்தினால் இஸ்தனிஸ்லாவ் கார்லிக் அவர்கள் ஆழ்ந்த அமைதியைத் தன்னகத்தேக் கொண்டவர்.
கடந்த மே மாதத்தில் அறுவைசிகிச்சை செய்து உடல் நலமற்று இருந்த கர்தினால் இஸ்தனிஸ்லாவ் கார்லிக் அவர்களோடு தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மே 10 அன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மே 20 அன்று மீண்டும் இல்லம் திரும்பிய கர்தினால் இஸ்தனிஸ்லாவ் அவர்களை திருத்தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருஅவைக்கு அவர் ஆற்றிய பணிக்காக நன்றியினையும் அவரது உடன் நலத்திற்காக செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.
இதய நோயினால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டு தூய அகுஸ்தீன் சபையின் அருள்பணியாளர்களுக்கான இல்லத்தில் ஓய்வு பெற்று வந்த கர்தினால் கார்லிக் அவர்கள் ஆகஸ்டு 8 வெள்ளிக்கிழமை இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து அனைத்து நிலையினரும் அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்து வருகின்றனர்.
2005 முதல், புனித அகுஸ்தீன் சபையின் உறுப்பினராக இருந்து வந்த கர்தினால் ஸ்தனிஸ்லாவ் அவர்கள், 2007-ஆம் ஆண்டில் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களாக கர்தினாலாக உயர்த்தப்பட்டார். கடந்த பிப்ரவரி 7 அன்று அர்ஜெண்டினாவின் பரானா உயர்மறைமாவட்ட பங்கு ஆலயத்தில் அருள்சகோதரிகள் மற்றும் மக்களோடு இணைந்து தனது 99வயதினை சிறப்பித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்