ஆயர் மாமன்ற செயலாக்கத்திற்கான புதிய ஆவணம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
ஆயர் மாமன்றத்தின் செயலாக்கங்களை புரிந்து கொள்ளும் நோக்குடன், ஆயர் மாமன்ற செயலாக்கத்திற்கான பாதைகள் என்னும் புதிய ஆவணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 7, திங்களன்று வெளியிடப்பட்ட இந்த ஆவணம் அகில உலக திரு அவை முழுவதும் ஒரே பாதையில் ஒன்றாக பயணிக்கும் ஒரு பொதுவான, பகிரப்பட்ட கட்டமைப்பை வழங்குகிறது.
2020ஆம் ஆண்டு மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், ஆயர் மாமன்றத்தின் செயலாக்கங்களை புரிந்து கொள்ள உதவுவதற்கென ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆயர் மாமன்றத்தின் தொடர் செயல்முறை 2028 அக்டோபர் மாதம் முழுமை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கியக்கத் திருஅவை என்பது மறைபரப்புப் பணியில் உள்ளது என்றும், இந்தப் பணியே ஆயர் மாமன்றத்தை செயல்படுத்த தூண்டுகிறது என்றும் தெரிவித்தார் ஆயர்மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் Mario Grech.
இந்த ஆவணத்தைத் தயாரித்த ஆயர் மாமன்ற பொதுச்செயலகம், தலத்திருஅவைகளுக்கு உதவ தயாராக இருப்பதோடு, அவைகளுக்கு செவிசாய்க்கவும், முயற்சிகளை ஆதரிக்கவும் குறிப்பாக, திருஅவைகளுக்கு இடையிலான உரையாடல் மற்றும் நன்மைத்தன பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் தயாராக இருப்பதாக கர்தினால் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணத்தில், ஆயர் மாமன்ற செயலாக்கப் பாதையின் விளக்கங்கள், நோக்கங்கள், ஆயர் மாமன்றத்தில் பங்கேற்கும் குழுக்கள், அவர்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புகள், ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணத்திற்கான பரிந்துரைகள், செயலாக்கப் பாதையை வடிவமைக்க உதவும் முறைகள் மற்றும் கருவிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Mario Grech.
திருஅவையின் ஆதரவை அனைவரும் உணர வைப்பதும், ஆயர் மாமன்ற பயணத்தை வலுப்படுத்தும் உரையாடலைத் தொடர்வதுமே இந்த ஆவணத்தின் நோக்கம் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Mario Grech.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்