MAP

கர்தினால்  José Tolentino de Mendonça கர்தினால் José Tolentino de Mendonça 

சையத் விருது நடுவர் குழுவில் கர்தினால் டோலென்டினோ நியமிக்கப்பட்டார்

கர்தினால் தொலெந்தினோ : பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்வதற்கும், உலகம் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும் பலரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

திருப்பீடத்தின் கலாச்சாரம் மற்றும் கல்வித் துறையின்  தலைவரான கர்தினால்  José Tolentino de Mendonça, 7வது ஆண்டு  சகோதரத்துவத்திற்கான விருதின் தேர்வுக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அல்-அஸ்ஹாரின் தலைமை இமாமுடனான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மற்றும், சகோதரத்துவம் குறித்த கூட்டு ஆவணத்தை இருவரும் வெளியிட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2019ஆம் ஆண்டு 10 இலட்சம் அமெரிக்க டாலர்களை பரிசாகக் கொண்ட இந்த விருது நிறுவப்பட்டது.

சையத் விருது வழங்கும் நடுவர் மன்ற உறுப்பினர்களில் திருத்தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அல்-அஸ்ஹாரின் தலைமை இமாம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் இருப்பர்.

மேலும்,  கர்தினால்  தொலெந்தினோ அவர்களுடன், யுனிசெப்பின் நிர்வாக இயக்குனர் Catherine Russell, ஐரோப்பிய ஒன்றிய அவையின் முன்னாள் தலைவரும் பெல்ஜியத்தின் முன்னாள் பிரதமருமான சார்லஸ் மைக்கேல்,  ஆப்பிரிக்கக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், சாடு நாட்டின் முன்னாள் பிரதமருமான Moussa Faki Mahamat, உஸ்பெகிஸ்தானின்  அரசுத் தலைவர் Saida Mirziyoyeva, உடன்பிறந்த உணர்விற்கான சையத் விருதின் பொதுச் செயலாளர் நீதிபதி முகமது அப்தெல்சலாம் ஆகியோரும் நடுவர் மன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நியமனம், சகோதரத்துவத்திற்கான சையத் விருதை வழங்கத் தொடங்கியதோடு, அதற்கான முதல் பெறுநராகவும்  விளங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்களின்  விலைமதிப்பற்ற மரபின் ஒரு பகுதி என்று கர்தினால் தெரிவித்துள்ளார்.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவுடன் இந்த பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தற்போதைய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களுக்கு கீழ்ப்படியும் மனப்பான்மையுடன், பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்வதற்கும், உலகம் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும் பலருடன் பழகுவதற்கும் தான்  ஆவலுடன் காத்திருப்பதாகவும்  தெரிவித்துள்ளார் கர்தினால் தொலெந்தினோ.

சகோதரத்துவத்தை முன்னேற்றுவதற்கும், அமைதியான வாழ்வை ஊக்குவிப்பதற்கும், சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையின் மதிப்புகளை ஆதரிப்பதற்கும் சிறந்த பங்களிப்புகளைச் செய்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு அங்கீகாரம் வழங்குவதை சையத் விருது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஜூலை 2025, 15:27