புனிதர்பட்ட படிநிலைகளுக்கான பெயர்கள் பரிந்துரை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இஸ்பெயின் நாட்டின் அருளாளர் Salvador Valera Parraவிடம் வேண்டியதால் இடம்பெற்ற புதுமை, இஸ்பெயின் நாட்டின் மூன்று மறைமாவட்ட அருள்பணியாளர்கள் மற்றும் அவர்களின் உடனுழைப்பாளர்களின் மறைசாட்சிய மரணங்கள், மூன்று இத்தாலிய மற்றும் ஒரு பிரசில் இறையடியாரின் வீரத்துவ பண்புகள் குறித்த விவரங்கள் ஜூன் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் புனிதர் பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் மர்ச்செல்லோ செமராரோ அவர்கள், இப்பெயர்களை திருத்தந்தையிடம் சமர்ப்பிக்க, அவ்விவரங்களை ஏற்றுக்கொண்டு படிநிலைகளைத் தொடர ஒப்புதல் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1816ஆம் ஆண்டு பிறந்து 1889ல் உயிரிழந்த இஸ்பானிய நாட்டு மறைமாவட்ட அருள்பணி Salvador Valera Parra, இஸ்பெயினில் 1936க்கும் 38க்கும் இடையில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட Manuel Izquierdo Izquierdo மற்றும் 58 உடனுழைப்பாளர்கள், 1936க்கும் 37க்கும் இடைப்பட்டக் காலத்தில் அதே ஆண்டில் மறைசாட்சியான மறைமாவட்ட அருள்பணி Antonio Montañés Chiquero மற்றும் அவரின் 64 உடனுழைப்பாளர்கள், 1944க்கும் 45க்கும் இடைப்பட்டக் காலத்தில் விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட மறைமாவட்ட அருள்பணி Raimond Cayré, பிரான்சிஸ்கன் துறவி Gerard Martin Cendrier, குருமட மாணவர் Roger Vallée, பொதுநிலையினர் Jean Mestre மற்றும் 46 உடனுழைப்பாளர்கள் குறித்த விவரங்கள் திருத்தந்தையின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மேலும், தங்கள் வீரத்துவ பண்புகளுக்காக மூன்று இத்தாலிய இறையடியார்களின் பெயர்களும், ஒரு பிரசில் இறையடியாரின் பெயரும் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்