MAP

இரஷ்யாவால் சிதைக்கப்பட்ட உக்ரைன் கட்டிடம் இரஷ்யாவால் சிதைக்கப்பட்ட உக்ரைன் கட்டிடம்  

தவிர்க்கமுடியாத போரும் இல்லை சாத்தியமில்லாத அமைதியும் இல்லை!

2025-ஆம் ஆண்டிலும் காசாவில் நடைபெறும் மனிதாபிமான பேரழிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: கர்தினால் பியத்ரோ பரோலின்

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

போரை இயல்பாக்குவதற்கும், ஆயுத மோதல்களே தவிர்க்க முடியாத தீர்வு என்ற பொய்த்தோற்றத்திற்கும் எதிராக எச்சரிக்கையையும், திருப்பீடத்தின் அமைதிக்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் இத்தாலிய நாளிதழான லா ஸ்தாம்பாவுக்கு  அளித்த நேர்காணல் ஒன்றில் எடுத்துக்காட்டியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

“அமைதி நிலவ நான் எனது எல்லா முயற்சிகளையும் அர்ப்பணிக்கிறேன்” என்னும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி இஸ்தான்புல் உச்சிமாநாட்டின் தோல்வி, போரை நிறுத்துவதற்கான முயற்சிகளின் முடிவைக் குறிக்க முடியாது என்றும், திருப்பீடம் தனது அமைதிக்கான அழைப்பை மீண்டும் புதுப்பித்துக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் கர்தினால் பரோலின்.

மேலும்,  உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவ வேண்டும் என்ற திருத்தந்தையின் அமைதிக்கான தொடர் அழைப்பை எடுத்துரைத்து, கட்டாயம் மற்றும் அச்சத்தினால் மட்டுமே அமைதி ஏற்படாது என்றும், ஆழமான, மரியாதைக்குரிய மற்றும் தீவிரமான உரையாடலின் வழியாகவே உண்மையான அமைதி ஏற்படும் என்றும் விளக்கியுள்ளார் கர்தினால்.

ஐரோப்பாவில்  அதிகரித்து வரும்  இராணுவச் செலவினங்களைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு நாடும் தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் உரிமை உடையதாயினும், ஆயுதக் குவிப்பு நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையை வளர்க்கிறதா என்றும், நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப உதவுகிறதா என்றும், சிந்திக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் கர்தினால் பரோலின்.

இஸ்ரேல் அரசு மனிதாபிமான உதவிக்கான தடையை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, 2025-ஆம் ஆண்டிலும் காசாவில் நடைபெறும் மனிதாபிமான பேரழிவைப் பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், திருப்பீடம் எப்போதும் உரையாடலின் வழி தீர்வு காண்பதையே ஆதரித்து வருகிறது என்றும், கர்தினால் பரோலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்சடங்கு மற்றும் தற்போதையத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் பதவியேற்பு நிகழ்வுகளில் உலகத் தலைவர்கள் பங்கேற்றத்தைச் சுட்டிக்காட்டி, இந்நிகழ்வு திருப்பீடத்தின் அமைதிக்கான உறுதிப்பாட்டிற்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கிய நிகழ்வாகும் என்றும் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஜூன் 2025, 14:50