MAP

வத்திக்கான் தோட்டத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோவின் மலர் சின்னம் வத்திக்கான் தோட்டத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோவின் மலர் சின்னம்  

வத்திக்கான் தோட்டத்தில் திருத்தந்தையின் பெயரில் மலர்ச் சின்னம்!

புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அருகிலுள்ள வத்திக்கான் தோட்டத்தில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மலர் சின்னத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டு திருந்துவைக்கப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அருகிலுள்ள வத்திக்கான் தோட்டத்தில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மலர் சின்னத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டு திருந்துவைக்கப்பட்டதாகச் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான வண்ணமயமான தாவரங்களால் வடிவமைக்கப்பட்ட இந்த உயிரோட்டமுள்ள பளபளப்பான தோட்டம் புனித பேதுரு பெருங்கோவிலின் குவிமாடத்திலிருந்து பார்க்கக்கூடிய திருத்தந்தை  சின்னங்களின் பாரம்பரியத்தைத் தொடர்வதாக அமைந்துள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை பதினான்காம் லியோவின் மலர் சின்னம்
திருத்தந்தை பதினான்காம் லியோவின் மலர் சின்னம்

வத்திக்கானின் தோட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சேவையால் இரண்டு வாரங்களுக்கு மேலாக உருவாக்கப்பட்ட இந்த வடிவமைப்பு, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மரபுச் சின்னங்கள் பொருந்திய மேலங்கியில் இருந்த சட்டகத்தைப் பயன்படுத்துகிறது என்றும், இதில் ஒரு தலைச்சீரா மற்றும் குறுக்கு சாவிகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வத்திக்கான் தோட்டத்தில் பணியாற்றும் பணியாளர்
வத்திக்கான் தோட்டத்தில் பணியாற்றும் பணியாளர்

பல்வேறு கூறுகளைக் குறிக்க அவற்றின் நிறங்கள் மற்றும் வடிவங்களுக்காக குறிப்பிட்ட தாவரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, அதாவது, குள்ளத் தாவரங்கள், வண்ணமயமான சுழல் மற்றும் தலைச்சீரா மற்றும் சாவிகளுக்கான ஹெலிக்ரைசம் இட்டாலிகம் போன்றவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மே 2025, 14:18