MAP

குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதி குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதி  (AFP or licensors)

கர்தினால்கள் அவை : உலக அமைதிக்காக செபியுங்கள்

போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் நிரந்தர போர் நிறுத்தத்திற்காக உழைக்க வேண்டும், எவ்வித முன்நிபந்தனைகளும் காலதாமதங்களும் இன்றி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தைக்கான தேர்வு குறித்த தயாரிப்புக்களில் ஈடுபட்டு 12 கூட்டங்களை நடத்தியுள்ள கர்தினால்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகில் அமைதிக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.

உலகில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் அமைதி ஒப்பந்தங்கள் இடம்பெறாமல் இருந்து வருவது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிடும் கர்தினால்கள், உக்ரைன், மத்தியக் கிழக்குப் பகுதிகள் மற்றும் மோதல் இடம்பெறும் உலகின் ஏனைய பகுதிகள் குறித்து தங்கள் அக்கறையை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய உலகில் பொதுமக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளது கர்தினால்கள் அவை.

போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் நிரந்தர போர் நிறுத்தத்திற்காக உழைக்க வேண்டும் எனவும், எவ்வித முன்நிபந்தனைகளும் காலதாமதங்களும் இன்றி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரவேண்டும் எனவும் கர்தினால்கள் போரிடும் தரப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள், மற்றும் உலகம் அனைத்தின் அமைதிக்காக இந்த அழைப்பை விடுப்பதாகக் கூறும் கர்தினால்கள்,  உலக மக்கள் அனைவரும் நீதியான மற்றும் நிலையான அமைதிக்காக இறைவேண்டல் செய்யவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 மே 2025, 16:18