MAP

ஐ.நா. கூட்டத்தில் கர்தினால் பரோலின் ஐ.நா. கூட்டத்தில் கர்தினால் பரோலின் 

புதிய திருத்தந்தையின் தேர்வு ஒரு புதுப்பிப்பின் காலத்தை தருகிறது

கர்தினால் பரோலின் : புதிய திருத்தந்தை அவர்கள் தாழ்ச்சியுடன் செவிமடுப்பதையும், கருணையுடன் செயல்படுவதையும், அனைத்திற்கும் மேலாக பொதுநலனை நாடுவதையும் கொண்டுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வரவேற்பு வழங்கும் ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மேலும் நீதி, ஒருமைப்பாடு மற்றும் அமைதியைத் தேடி வருபவர்களுக்கு இது ஒரு புதுப்பிப்பின் காலம் என்றார்.

புதிய திருத்தந்தையின் தேர்வு கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்ல, அமைதி, ஒருமைப்பாடு மற்றும் நீதியைத் தேடி வருவோருக்கு புதுப்பிப்பின் காலமாக உள்ளது என்ற கர்தினால் பரோலின் அவர்கள், புதிய திருத்தந்தை அவர்கள் சந்திப்பின் கலாச்சாரத்தை கைக்கொண்டுள்ளதாகவும், தாழ்ச்சியுடன் செவிமடுப்பதையும், கருணையுடன் செயல்படுவதையும், அனைத்திற்கும் மேலாக பொதுநலனை நாடுவதையும் அரசியல் உறவுகளில் செயலாண்மைத் திறமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருத்தந்தை 14ஆம் லியோவின் தலைமையின் கீழ் திருப்பீடம் உலக அரசியல் பிரதிநிதிகளுடன் இணந்து மனித மாண்பை ஊக்குவிக்கவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்கவும், தப்பெண்ணம் உள்ள இடங்களில் பாலங்களைக் கட்டியெழுப்பவும் பாடுபடும் என்ற திருப்பீடச் செயலர், திருப்பீடத்தின் அரசியல் உறவுகள் என்பது அமைதி, நீதி மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றார்.

அனைத்துலக ஒத்துழைப்பை பின்னிப்பிணைவதில் ஒரு முக்கிய பங்காளியாக திருப்பீடம் இருக்கும் எனவும், ஏழைகளை பாதுகாக்கவும், அமைதியைக் கண்டடையவும், ஒன்றிணைந்த மனித குல வளர்ச்சிக்கு உழைக்கவும் ஒழுக்கரீதி குரலாக தொடர்ந்து செயல்படும் எனவும் கூறினார் திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 மே 2025, 15:02