புற்று நோய் குறித்து வத்திக்கானில் கருத்தரங்கு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உலக நல நெருக்கடிகள் பெருக புற்று நோயும் ஒரு காரணமாக தொடர்ந்து இருந்து வருவது குறித்து திருப்பீட அறிவியல் கழகத்தின் இரு நாள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
மே 22 மற்றும் 23 தேதிகளில் திருப்பீட அறிவியல் கழகம் மற்றும் புற்றுநோய் அறிவியலுக்கான ஐரோப்பிய கழகத்துடன் இணைந்து வத்திக்கானில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் புற்றுநோய் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்கள், நலக் கொள்கைகளை வடிப்போர், நோயாளிகளை பராமரிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்காவிலிருந்து பலர் கலந்துகொண்டனர்.
புதிய புள்ளிவிவரங்களின்படி, உலகில் 2 கோடி புதிய புற்று நோய் பாதிப்புக்களும், ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடி புற்று நோய் மரணங்களும் இடம்பெறுகின்றன.
இன்றைய உலகில் அறிவியல் முன்னேற்றங்கள் குறிப்பிடத்தகும் வகையில் இடம்பெற்று வந்தாலும், வடக்குக்கும், தெற்குக்கும், நாடுகளுக்குள்ளும் சரியான முறையில் வழங்கப்படவில்லை எனக் குறை கூறும் இந்த வல்லுனர்கள், புற்றுநோய்க்கெதிரான அறிவியல் ஆய்வுகளின் பலன்களை ஏழைகளும் பெறும் வண்ணமும், அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்கும் வகையிலும் புதிய கொள்கைகளையும் வகுத்துள்ளது இக்கருத்தரங்கு.
புற்று நோய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பயன்படும் வகையில் அனைத்து அறிவியல் வளர்ச்சிகளும் அனைவருக்கும் கிடைக்க வழிவகைச் செய்யப்பட வேண்டும் எனவும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டோர் அழைப்பு விடுத்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்