அருளாளர்களாக உயர்த்தப்பட்ட தூய கேத்தரீன் சபை அருள்சகோதரிகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
போலந்து மீதான இரஷ்ய படையெடுப்பின்போது மறைசாட்சிகளாக தங்கள் உயிரை இழந்த கன்னியும் மறைசாட்சியுமான தூய கத்தரீன் சபையைச் சார்ந்த 15 அருள்சகோதரிகள் மே 31 சனிக்கிழமை அருளாளராக உயர்த்தப்பட்டனர்.
1945ஆம் ஆண்டு ஜனவரி 22 முதல் நவம்பர் 25 வரை தூய கேத்தரின் சபையைச் சார்ந்த 15 அருள்சகோதரிகள் வன்முறையாளர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டும், வதைமுகாம்களில் துன்புறுத்தப்பட்டும் இறந்தனர்.
அருளாளர்களாக உயர்த்தப்பட்ட அருள்சகோதரிகள் முறையே,
1. மரிய கிறிஸ்தோஃபோரா குளோம்ஃபாஸ் (42),
2. மரிய லிபெரியா தோம்னிக் (40)
3. மரிய லெயோனிச் முல்லெர் (31)
4. மரிய மவுரிட்ஷியா மார்கென்பீஃல்டு (41)
5. மரிய திபுர்சியா மிஷேக் (56)
6. மரிய செகுந்தினா ராட்டென்பர்க் (57)
7. மரிய அதெல்கார்டு போனிக் (45)
8. மரிய அனிசெத்தா ஸ்கிபௌஸ்கி (62)
9. மரிய கெபார்தா ஸ்கூரோட்டர் (58)
10. மரிய சபினெல்லா அங்கிரிக் (64)
11. மரிய போனா பெஸ்ட்கா (40)
12. மரிய குன்ஃகில்டு ஸ்டீஃபன் (26)
13. மரிய ரோலந்தா ஆப்ரகாம் (31)
14. மரிய கரித்தினா ஃபால் (58)
15. மரிய சவேரியா ரோஃவ்தர் (58)
செம்படை போலந்திற்குள் நுழைந்த நாள்களானது, கத்தோலிக்க திருஅவை, அதன் கட்டமைப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகளை எதிர்த்தது, மேலும் கடவுள் மறுப்புக்கொள்கைகளையும் கம்யூனிசக் கொள்கைகளையும் அதிகமாக வலியுறுத்திவந்தது. கத்தோலிக்கத் திருஅவை அதன் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகவும் தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்பட்டு அதனை அழிப்பதற்காக பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர்.
துறவறத்தை ஏற்று மக்களுக்கான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த அருள்சகோதரிகளின் பணிகளானது வன்முறையாளர்களால் வெறுக்கப்பட்டதால் அருள்சகோதரிகள் கொடுமையான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றும் சிலர் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
அருள்சகோதரிகளின் துறவற ஆடைகள் கிழிக்கப்பட்டும், அவர்கள் வைத்திருந்த செபமாலை, திருச்சிலுவை, செபப்புத்தகம் ஆகியவை சேதமாக்குவதன் வழியாக தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். ஜெர்மன் வம்சாவளியைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அருள்சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டும் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டும் கொல்லப்பட்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்