இரஷ்யக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி உரையாடல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
உக்ரைனில் நடைபெற்று வரும் போரின் நிலைமை, இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள், உலக அரசியல் ஆகியவற்றை முன்னிறுத்தி இரஷ்ய கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடல் ஒன்றினை நிகழ்த்தியுள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
ஏப்ரல் 4, வெள்ளிக்கிழமை பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், இரஷ்ய கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடல் ஒன்றினை நிகழ்த்தியுள்ளதாகத் திருப்பீடத்தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.
சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பான விடயங்களில் திருப்பீடம் தனது மனிதாபிமான முயற்சிகளைத் தொடர்வதற்கான விருப்பம் இந்த உரையாடலில் வலியுறுத்தப்பட்டது என்றும், ஒட்டுமொத்த உலக அரசியல் பற்றிய நிலை குறித்தும் இவ்வுரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இறுதியாக, துறவறத்தாரின் வாழ்வு குறித்த சில கருத்துக்கள் பகிரப்பட்ட இந்த உரையாடலில் குறிப்பாக, இரஷ்யாவில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவையின் நிலை தொடர்பான சில விடயங்களும் ஆராயப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒட்டுமொத்த உரையாடலும் உலக மக்களின் அமைதிக்காக போர் நிறுத்தம் அவசியமானது என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்திருந்தது உவ்வுரையாடல்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்