MAP

புதிய தபால் தலை புதிய தபால் தலை  

வத்திக்கான் தபால் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள புதிய அஞ்சல் தலை

திருஅவையின் 266ஆவது திருத்தந்தையாக பன்னிரண்டு ஆண்டு காலம் திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஏப்ரல் 21, திங்கள் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தை அடையாளப்படுத்தும் விதமாக, புதிய தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஏப்ரல் 28 திங்கட்கிழமை, “Sede Vacante” அதாவது தலைமைப்பீடம் காலியாக இருக்கும் காலம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் புதிய  அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது வத்திக்கானின் தபால் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் அமைப்புகள் இயக்குநரகம்.

திருஅவையின் 266ஆவது திருத்தந்தையாக பன்னிரண்டு ஆண்டு காலம் திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஏப்ரல் 21 திங்கள் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தை அடையாளப்படுத்தும் விதமாக, புதிய தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தபால் தலைகளானது வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இருக்கும் அனைத்து தபால் அலுவலகம் மற்றும் வத்திக்கான் அஞ்சல் அலுவலகத்திலும் ஏப்ரல் 28 திங்கள்கிழமை முதல் கிடைக்கப்பட உள்ளது.

நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இத்தபால் தலைகளானது, 1.25, 1.30, 2.45, 3.20 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

திருப்பீடத்தினை அடையாளப்படுத்தும் சின்னங்களும், திருத்தூதர் பேதுருவின் சாவியைத் தாங்கிய வண்ணம் வானதூதர்களும் இத்தபால் தலையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். தபால் தலையில் மேல்பகுதியில் தலைமைப்பீடம் காலியாக இருக்கும் காலம் 2025 (“Sede Vacante” - 2025) என்பதும் கீழ்ப்பகுதியில் வத்திக்கான் நகரம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஏப்ரல் 2025, 14:27