MAP

நீசேயா பொதுச்சங்கம் நீசேயா பொதுச்சங்கம் 

நீசேயு பொதுச்சங்கத்தின் 1700மாம் ஆண்டு கொண்டாட்டங்கள்

நம்பிக்கையின் யூபிலி ஆண்டில் 1700ஆம் கொண்டாட்டம் நிகழ்வதும், உயிர்ப்புத் திருவிழாக் கொண்டாட்டங்கள் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளாலும் ஒரே நாளில் இவ்வாண்டில் கொண்டாடப்படுவதும் முக்கியத்துவம் நிறைந்தவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

325ஆம் ஆண்டு நீசேயா பொதுச்சங்கம் இடம்பெற்றதன் 1700ஆம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக அனைத்துலக இறையியல் கழகம் ஏடு  ஒன்றை வெளியிட்டுள்ளது.

இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தையும், தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளில் விசுவாசத்தையும் வலியுறுத்தும் அனைத்துலக விசுவாச அறிக்கை உருவாக்கப்பட்ட நீசேயு பொதுச்சங்கத்தின் 1700மாம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி, “இயேசு கிறிஸ்து இறைமகனும் மீட்பரும் : நீசேயா பொதுச்சங்கத்தின் 1700ஆம் ஆண்டு (325-2025)” என்ற தலைப்பில் ஏடு ஒன்றை வெளியிட்டுள்ளது அனைத்துலக இறையியல் கழகம்.

முதல் பொதுச்சங்கம் நீசேயாவில் 325ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, விசுவாச அறிக்கை உருவாக்கப்பட்டதன் 1700ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் கிறிஸ்தவ உலகால் வரும் மே மாதம் 20ஆம் தேதி  சிறப்பிக்கப்படவுள்ள நிலையில், நம்பிக்கையின் யூபிலி ஆண்டில் இது நிகழ்வதும், உயிர்ப்புத் திருவிழாக் கொண்டாட்டங்கள் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளாலும் ஒரே நாளில் இவ்வாண்டில் கொண்டாடப்படுவதும் முக்கியத்துவம் நிறைந்தவை என இக்கழகம் தன் ஏட்டில் கூறியுள்ளது.

இறையியாலாளர்களின் தீவிர ஆலோசனைகளுக்குப் பின் இந்த ஏடு தயாரிக்கப்பட்டதாகவும், விசுவாசக்கோட்பாட்டு திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Víctor Manuel Fernández மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இசைவிற்குப்பின் இந்த ஏடு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ விசுவாசம் என்பது ஒரு சிலருக்கு மட்டும் உரியதல்ல, மாறாக அனைவருக்கும் உரியது, அதன் பாதுகாப்பு நீசேயா பொதுச்சங்கத்தாலும் கான்ஸ்டன்டைன் மன்னராலும் உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும் இவ்வேட்டில் கூறப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் 20 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 7.30 வரை இவ்வேட்டை தயாரித்த இறையியலாளர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்குபெறும் ஆய்வு பயிற்சி இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஏப்ரல் 2025, 13:57