MAP

வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பம் வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பம்  (AFP or licensors)

Evangelium vitae வெளியிடப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவு

போர்களாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் பெண்கள், குழந்தைகள், இளையோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

Evangelium vitae என்ற சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவையொட்டி மனித வாழ்விற்கான மேய்ப்புப்பணி அக்கறை குறித்த சிற்றேடு ஒன்றை வெளியிட்டுள்ளது, வாழ்வு, குடும்பம் மற்றும் பொதுநிலையினர்க்கான திருப்பீடத்துறை.

1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் Evangelium vitae சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவையொட்டி செவ்வாய்க்கிழமையன்று, ’வாழ்வு என்பது நன்மையானது. மனித வாழ்வுக்கான மேய்ப்புப்பணி அக்கறையை ஆராயத் துவக்குதல்' என்ற சிற்றேட்டை வெளியிட்டுள்ளது இத்திருப்பீடத்துறை.

மனித மாண்பு மீறப்பட்டுவரும் இன்றைய காலக்கட்டத்தில் மனித வாழ்விற்கான மேய்ப்புப்பணி அக்கறையை ஊக்குவிப்பதிலும், அனைத்து பகுதிகளிலும் கலாச்சாரங்களிலும் மனித வாழ்வை பாதுகாத்து ஊக்குவிப்பதிலும் இந்த சிற்றேட்டின் வழி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது வாழ்வு, குடும்பம் மற்றும் பொதுநிலையினர்க்கான இத்திருப்பீடத்துறை.

போர்களாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் பெண்கள், குழந்தைகள், இளையோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனக்கூறும் இந்த புதிய ஏடு, ஒவ்வொருவரின் வாழ்வும் எப்போதும் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு உதவும் வகையில் சிறப்பு வழிமுறைகள் குறித்து தலத்திருஅவைகளுடன் இத்திருப்பீடத்துறை தொடர்பு கொண்டு விவாதித்து வருவதாகவும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மார்ச் 2025, 14:31