2028 -ஆம் ஆண்டு திருஅவைக் கூட்டத்திற்கான இணைச் செயல்முறை
மெரினா ராஜ் – வத்திக்கான்
அனைத்து ஆயர்கள் மற்றும் கீழைத்திரு அவையினர் வழியாக அவர்களின் மேய்ப்புப்பணிப் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒட்டுமொத்த இறைமக்களுக்கும், ஒருங்கிணைந்த ஆயர் பேரவையால் முன்மொழியப்பட்ட, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது ஆயர் மாமன்ற பொதுச்செயலகம்.
மார்ச் 15, சனிக்கிழமை ஆயர் மாமன்றத்தின் பொதுச்செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையானது 2025 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2028-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடைமுறைப்படுத்த வேண்டிய பல்வேறு செயல்பாடுகள் பற்றிய பல திட்டங்களைக் குறித்து வரையறுத்துள்ளது.
ஒன்றிப்பு, பங்கேற்பு, பணி என்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின் பலன்களை நடைமுறைப்படுத்துதல் குறித்து, தலத்திருஅவைகளுக்கு ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட, நடைமுறைப்படுத்துதல் கட்டத்தின் உடன் மதிப்பீட்டு செயல்முறையை வழங்கியுள்ளது இக்கடிதம்.
2025 -ஆம் ஆண்டு மார்ச் மாதம், உடன்பயணித்தல் மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளை அறிவித்தலோடு ஆரம்பமாகும் இந்த திருஅவை பேரவையானது, 2028 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெற உள்ள திருஅவைக் கொண்டாட்டத்துடன் நிறைவிற்கு வர உள்ளது.
நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயல்முறைகளுக்கான திட்டங்கள்
2025 மார்ச் – உடன் பயணித்தல் மற்றும் மதிப்பீட்டுச் செயல்முறையின் அறிவிப்பு.
2025 மே – நடைமுறைப்படுத்தப்படுதல் குறித்தும் மற்றும் அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய ஆவணம் வெளியீடு.
2025 ஜூன் முதல் 2026 டிசம்பர் வரை - தலத்திருஅவைகள் மற்றும் அவற்றின் குழுக்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாதைகள்.
2025 அக்டோபர் 24, 25 – உலக ஆயர் மாமன்றக் குழுக்கள் மற்றும் பங்கேற்றோர் குழுவினருக்கான யூபிலி.
2027 முதல் பாதியில் - மறைமாவட்டங்கள் மற்றும் கீழைத்திருஅவை மன்றங்களில் மதிப்பீடு செய்தல்.
2027 இரண்டாம் பாதியில் - தேசிய மற்றும் பன்னாட்டு ஆயர் பேரவைகள், கிழக்கத்திய திருஅவை படிநிலை கட்டமைப்புகள் மற்றும் திருஅவையின் பிற குழுக்களின் மதிப்பீட்டு கூட்டங்கள்.
2028 முதல் பாதியில் – கண்டங்கள் அளவிலான மதிப்பீட்டு கூட்டங்கள்.
2028 ஜூன் – 2028 அக்டோபர் திருஅவைக் கூட்டத்தின் பணிக்கான “Instrumentum laboris” வெளியீடு.
2028 அக்டோபர் - வத்திக்கானில் திருஅவைக் கூட்டத்தினரின் கொண்டாட்டம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்