MAP

திருச்சிலுவை திருச்சிலுவ໾&Բ;

தவக்கால வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு உரைகள்

தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெறும் இத்தவக்கால சிறப்பு உரைகளில் விருப்பமுள்ள யாவரும் கலந்துகொள்ளலாம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

2025 -ஆம் ஆண்டு தவக்காலத்தை முன்னிட்டு வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் தவக்கால சிறப்பு உரைகளானது, கப்புச்சின் துறவு சபையைச் சார்ந்த அருள்பணியாளர் Roberto Pasolini அவர்களால் வழங்கப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளது திருப்பீடத்துறை.

மார்ச் 17, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களில், தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெறும் சிறப்பு உரைகளில் விருப்பமுள்ள யாவரும் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தவக்கால ஆண்டு தியானம் வழங்கிய கப்புச்சின் துறவுசபை அருள்பணி ரொபர்த்தோ பசோலினி அவர்கள், “இயேசுவில் நிலையானதும், புதிய வாழ்க்கையின் எதிர்நோக்கில் வேரூன்றப்பட்டு அடித்தளமிடப்பட்டதும்" என்னும் தலைப்பில் இத்தவக்கால உரைகளை வழங்க இருக்கின்றார்.

மார்ச் 21, 28 மற்றும் ஏப்ரல் 4, 11 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் உரோம் உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு இத்தவக்கால சிறப்பு உரைகள் வழங்கப்பட உள்ளன.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 மார்ச் 2025, 14:00