MAP

புலம்பெயரும் மக்கள் புலம்பெயரும் மக்கள்  (REUTERS)

அக்டோபர் மாதத்தில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் உலக நாள்

இவ்வாண்டு அக்டோபர் 4,5 சனி ஞாயிறுகளில், புலம்பெயர்ந்தோர் மற்றும் உலக மறைப்பணியாளர்கள் யூபிலி நாளன்று சிறப்பிக்கப்பட இருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளது ஒருங்கிணைந்த மனித குல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

“புலம்பெயர்ந்தோர், எதிர்நோக்கின் மறைப்பணியாளர்கள்” என்ற 111-ஆவது உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்திற்கான தலைப்பானது, வாழ்வில் எவ்வளவு தான் சிரமங்கள் துயரங்கள் இருந்தபோதிலும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் சான்றளிக்கும் புலம்பெயர்ந்தோரின் துணிவையும் விடாமுயற்சியையும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளது ஒருங்கிணைந்த மனித குல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறை.

மார்ச்3, திங்கள்கிழமை திருத்தந்தை வெளியிட்ட உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நாளுக்கான குறுஞ்செய்தியை முன்வைத்து இவ்வாறு தெரிவித்துள்ள  ஒருங்கிணைந்த மனித குல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறையானது புலம்பெயர்ந்தோர் தாங்கள் இடம்பெயரும் எல்லைகளுக்கு அப்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கடவுளிடம் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையேக் காரணம் என்றும் எடுத்துரைத்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும் உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நாளானது இவ்வாண்டு அக்டோபர் 4,5 (சனி ஞாயிறுகளில்), புலம்பெயர்ந்தோர் மற்றும் உலக மறைப்பணியாளர்கள் யூபிலி நாளன்று சிறப்பிக்கப்பட இருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளது.

தாங்கள் செல்கின்ற மற்றும் வரவேற்கப்படுகின்ற இடங்களில் புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக இருக்கின்றனர் என்றும், நம்பிக்கையைப் புத்துயிர் பெற உதவுகிறார்கள், பொதுவான மதிப்புகளின் அடிப்படையில் மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிக்கிறார்கள் என்றும் அறிவித்துள்ளது திருப்பீடத்துறை.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மார்ச் 2025, 15:50