MAP

திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் உடன்  அரசுத்தலைவர் Gitanas NausÄda திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் உடன் அரசுத்தலைவர் Gitanas NausÄda   (VATICAN MEDIA Divisione Foto)

லிதுவேனியா குடியரசுத்தலைவரைச் சந்தித்தார் கர்தினால் பரோலின்

லிதுவேனிய சமூகத்தில் கிறிஸ்தவ நம்பிக்கையின் நேர்மறையான பங்களிப்பு குறித்தும், இருநாடுகளுக்கு இடையிலான நல்ல மற்றும் பயனுள்ள உறவுகள் பற்றியும் உரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்டது - திருப்பீடத்தகவல் துறை

மெரினா ராஜ் - வத்திக்கான்

லிதுவேனியா குடியரசுத் தலைவர் Gitanas Nausėda அவர்களைச் சந்தித்து வரவேற்றார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

மார்ச் 3, திங்கள்கிழமை காலை திருப்பீடச்செயலகத்தில், பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களுடன் இணைந்து திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், லிதுவேனியா நாட்டின் குடியசரசுத்தலைவர் Gitanas Nausėda அவர்களைச் சந்தித்ததாக திருப்பீடத்தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

தேசிய யூபிலி திருப்பயணத்தில் பங்கேற்பதற்காக வத்திருக்கும் Gitanas Nausėda அவர்களை வரவேற்று மகிழ்ந்த கர்தினால் பரோலின் அவர்கள், உரையாடலின்போது, ​​லிதுவேனிய சமூகத்தில் கிறிஸ்தவ நம்பிக்கையின் நேர்மறையான பங்களிப்பைக் குறிப்பிட்டார் என்றும், இருநாடுகளுக்கு இடையிலான  நல்ல மற்றும் பயனுள்ள உறவுகள் பற்றி பகிர்ந்துகொள்ளப்பட்டது என்றும் திருப்பீடத்தகவல் துறை அறிவித்துள்ளது.

மாநில மற்றும் பன்னாட்டு சூழல், உக்ரைனில் அமைதிக்கான வாய்ப்புகள் குறித்து உரையாடலில் எடுத்துரைக்கப்பட்டன என்றும் அவ்வறிக்கை எடுத்துரைக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மார்ச் 2025, 15:55