MAP

பத்திரிகையாளர்களுடன் கர்தினால் பரோலின் பத்திரிகையாளர்களுடன் கர்தினால் பரோலின்  (ANSA)

இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள்

அகில உலக அளவில், குறிப்பாக ஐரோப்பாவில் தற்போது மீண்டும் ஆயுதம் ஏந்தும் ஒரு போக்கு எழும்பிவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருப்பீடச் செயலர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மனம் திறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று நீதியான நிலைத்த அமைதி இடம்பெறவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

உலகில் ஆயுதக் களைவு இடம்பெற வேண்டும் என இத்தாலியத் தினத்தாளுக்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திருப்பீடச் செயலர், அகில உலக அளவில், குறிப்பாக ஐரோப்பாவில் தற்போது மீண்டும் ஆயுதம் ஏந்தும் ஒரு போக்கு எழும்பிவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

‘இரமதான் மேசை - இப்தார்’ என்ற தலைப்பில் வத்திக்கானிற்கான மொரோக்கோ நாட்டு தூதரகத்தால் ஏற்பாடுச் செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், ஆயுதக் களைவுக்கான அழைப்பை முதல் உலகப்போர் காலத்திலிருந்தே திருப்பீடம் முன்வைத்து வருகிறது என எடுத்துரைத்தார்.

ஆயுதம் தாங்குவதற்கான ஐரோப்பாவின் அண்மை போக்கு குறித்து திருப்பீடம் கவலை கொண்டு வருகிறது என்ற கர்தினால் பரோலின் அவர்கள், இரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்நிபந்தனையுமின்றி இடம்பெறவேண்டும் எனற அழைப்பையும் முன்வைத்தார்.

உக்ரைன் நாடு எவ்வித முன்நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள முன்வரும்போது, இரஷ்யாவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கர்தினால், அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவது முன்நிபந்தனைகளால் தடைபடக்கூடாது என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மார்ச் 2025, 13:36