உரோமை குழந்தை இயேசு மருத்துவமனைக்கு 9-வது இடம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நியூஸ் வீக் (Newsweek) என்ற இதழின் 2025-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் உரோமையிலுள்ள குழந்தை இயேசு (Bambino Gesù) குழந்தைகள் மருத்துவமனை உலகளவில் 6 வது இடத்தைப் பிடித்துள்ளது என்றும், இது 2024-ஆம் ஆண்டில் 9-வது இடத்திலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரோமையிலுள்ள குழந்தை இயேசு மருத்துவமனை இத்தாலியின் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக உள்ளது என்றும், உலகளாவிய முதல் 25 இடங்களில் உள்ள ஒரே இத்தாலியக் குழந்தை மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனையாகவும் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தரவரிசை மருத்துவமனை பரிந்துரைகள், நோயாளர்களின் அனுபவங்கள் மற்றும் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் சிகிச்சையின் தரம் போன்ற முக்கிய செயல்திறன்கள் கருத்தில்கொள்ளப்பட்ட நிலையில், இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது இம்மருத்துவம்மனை என்றும் உரைக்கிறது இதுகுறித்த செய்திக் குறிப்பு.
மேலும் ஆண்டுதோறும் 25 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநோயாளர் வருகைகள் மற்றும் அரிய நோய்களில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவத்துவ சிகிச்சையுடன், குழந்தை இயேசு மருத்துவமனை ஐரோப்பாவில் குழந்தை மருத்துவத்தில் முன்னணியில் உள்ளதாகவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
சிறப்பாக, உயர்தர பராமரிப்பு, புதிய முறை மற்றும் குழந்தை மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் இந்த மருத்துவமனை மிகவும் உறுதியாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு.
நியூஸ்வீக் (Newsweek) என்பது புகழ்பெற்ற அமெரிக்க இதழ். இது வாரந்தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் முக்கிய இதழ்களில் ஒன்று. அமெரிக்கா, பாக்கித்தான், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய பதிப்புகளில் வெளியாகிறது. மேலும் இது ஜப்பானிய மொழியிலும், போலந்து மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் வெளியாகிறது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்