உரோமை புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் புனிதக் கதவு திறப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜனவரி 1, இப்புதன், ஆண்டின் முதல் நாளன்று, புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் நிகழ்ந்த திருப்பலியின்போது லிதுவேனியன் கர்தினால் Rolandas Makrickas அவர்கள், அதன் புனிதக் கதவை திறந்துவைத்துச் சிறப்பித்தார் என்று செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.
புனிதக் கதவின் ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் கடவுளின் தாயான கன்னி மரியாவுடன் அதன் தொடர்பு குறித்து சிறப்பாக விளக்கிக் கூறிய இப்பெருங்கோவிலின் தலைமைப் பணியாளருமாகவும் செயல்படும் கர்தினால் Makrickas அவர்கள், மனிதகுலத்திற்கு வழிகாட்டும் ஒளியாக, என்றுமுள வாழ்வை வரலாற்றுடன் ஒன்றிணைத்து, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை வழங்குவது, புனித மேரி மேஜர் அன்னை திருவுருவத்தால் அடையாளப்படுத்தப்பட்ட அதன் பங்களிப்புக் குறித்தும் வலியுறுத்தினார்.
இப்பெருங்கோவிலுள்ள புனித தொட்டிலின் அருளிக்கம் பற்றியும் எடுத்துரைத்த கர்தினால், இது இன்றயை திருப்பயணிகளின் நம்பிக்கையை பெத்லேகேமிற்கு குழந்தை இயேசுவைக் காணச் சென்ற இடையர்களின் முதல் பயணத்துடன் இணைகிறது என்றும் எடுத்துக்காட்டினார்
புனித மேரி மேஜர் பெருங்கோவிலை வழிகாட்டும் விண்மீனாக விவரித்த கர்தினால், பெத்லகேமின் விண்மீனைப்போல, உலகின் உண்மை ஒளியான இயேசு கிறிஸ்துவை நோக்கி இது திருப்பயணிகளுக்கு வழிகாட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
யூபிலி ஆண்டு, எதிர்நோக்கின் பாதையில் இருந்து யாரும் விலக்கப்படாத இரக்கத்தின் காலமாக சிறப்பிக்கப்படுகிறது என்றும், மரியா தனது மகன் இயேசுவை நோக்கி அனைத்துத் திருப்பயணிகளையும் வழிநடத்துகிறார் என்றும் குறிப்பிட்டார் கர்தினால் Makrickas.
இந்த விழா புனிதத் திருப்பயணத்தின் உலகளாவிய மற்றும் வரவேற்கத்தக்க தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், விசுவாசிகள் அதன் ஆன்மிகப் புதுப்பிப்பை ஏற்றுக்கொள்வதற்கு அழைக்கப்படுகின்றனர் என்றும் உரைத்தார் கர்தினால்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்