ஈரான் அரசுத்தலைவருடன் உரையாடிய கர்தினால் பரோலின்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆகஸ்ட் 12 திங்கள் கிழமை காலை திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், ஈரான் இஸ்லாமியக் குடியரசு நாட்டின் அரசுத்தலைவர் Masoud Pezeshkian அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.
2024ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று போட்டியிட்டு வெற்றிபெற்று ஜூலை 28 அன்று ஈரான் இஸ்லாமியக் குடியரசின் 9ஆவது அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற Masoud Pezeshkian அவர்கள் பதவிஏற்றதற்கு தனது வாழ்த்துக்களைக் கூறி மகிழ்ந்த கர்தினால் பரோலின் அவர்கள், பொதுநலன் சார்ந்த விடயங்கள் பற்றியும் அவருடன் தொலைபேசியில் விவாதித்தார்.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் சூழல் குறித்த திருஅவையின் அக்கறையை வெளிப்படுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், மோதம், போர் போன்றவற்றிற்குப் பதிலாக உரையாடல் பேச்சுவார்த்தை, அமைதி போன்றவற்றை திருஅவை விரும்புகின்றது என்றும் எடுத்துரைத்தார்.
1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று பிறந்த அரசுத்தலைவர் Masoud Pezeshkian அவர்கள் இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். 2001 முதல் 2005 வரை மருத்துவம் மற்றும் நல வாழ்விற்கான அமைச்சராக இவர் பணியாற்றியுள்ளார். 2013, 2021 ஆகிய ஆண்டுகளில் தேர்தலில் தோல்வியைத் தழுவிய இவர் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தனது 69ஆவது வயதில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்