MAP

காஸ்தல் கந்தோல்ஃபோ இல்லத்தில் திருத்தந்தை (05.09.2025) காஸ்தல் கந்தோல்ஃபோ இல்லத்தில் திருத்தந்தை (05.09.2025)  (ANSA)

காஸ்தல் கந்தோல்ஃபோவிற்குச் சென்றுள்ள திருத்தந்தை

ஜூலை 6 முதல் 22 வரை காஸ்தல் கந்தோல்ஃபோவில் தனது கோடை விடுமுறையைக் கழித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அதன் பின்னர் ஆகஸ்டு மாதத்தின் நடுப்பகுதியில் விண்ணேற்பு அன்னை பெருவிழாவன்று சில நாள்கள் அங்கு சென்று தங்கி இருந்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

செப்டம்பர் 8 அன்னை மரியின் பிறப்பு விழாவன்று மாலையில் திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோ சென்றார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

தனது அலுவலகப் பணிகளை திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லத்தில் செய்ய இருக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், செப்டம்பர் 9, செவ்வாய் பிற்பகலில் வத்திக்கான் இல்லம் திரும்புகின்றார்.

ஜூலை 6 முதல் 22 வரை காஸ்தல் கந்தோல்ஃபோவில் தனது கோடை விடுமுறையைக் கழித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அதன் பின்னர் ஆகஸ்டு மாதத்தின் நடுப்பகுதியில் விண்ணேற்பு அன்னை பெருவிழாவன்று சில நாள்கள் அங்கு சென்று தங்கி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 5, வெள்ளியன்று திருப்பீடத்திற்குச் சொந்தமான 55 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட போர்கோ லௌதாதோ சி' என்ற திட்டத்தை பார்வையிடச் சென்றார். 

மேலும் அங்குள்ள 3,000 க்கும் மேற்பட்ட தாவர இனங்களைப் பராமரிக்கும் ஊழியர்களைச் சந்தித்து அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 செப்டம்பர் 2025, 13:48