MAP

அனைத்து படைப்புக்களுடனான நமது உறவு

செப்டம்பர் மாதத்திற்கான செபக்கருத்தாக “அனைத்து படைப்புக்களுடனான நமது உறவு” என்ற தலைப்பில் தனது கருத்துக்களையும் செபங்களையும் காணொளியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயற்கையின்மீது அளவற்ற அன்பும் ஈடுபாடும் கொண்ட புனித பிரான்சிஸ் அசிசியாரால் ஈர்க்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும், கடவுளால் அன்புசெய்யப்பட்டவர்களும்,  அனைவரின் அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியான அனைத்து உயிரினங்களுடனும், நாம் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை அனுபவிக்க வேண்டும் என செபிப்போம் என்று எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் மாதத்திற்கான செபக்கருத்தாக “அனைத்து படைப்புக்களுடனான நமது உறவு” என்ற தலைப்பில் தனது கருத்துக்களையும் செபங்களையும் காணொளியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருத்தந்தையின் காணொளிச்செய்தியில் இடம்பெற்ற செபம்

ஆண்டவரே, நீர் படைத்த அனைத்தையும் நீர் அன்பு செய்கின்றீர்.

உமது மென்மையின் மறைபொருளுக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை.

ஒவ்வொரு உயிரினமும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும்,

உமது அன்பின் பலனாக அது விளங்குகின்றது. அதற்கு இந்த உலகில் ஓர் இடமும் உண்டு.

எளிமையான அல்லது குறுகிய வாழ்க்கை கூட உமது பராமரிப்பால் சூழப்பட்டுள்ளது.

அசிசியின் புனித பிரான்சிஸைப் போலவே, இன்று நாங்களும் “ஆண்டவர் போற்றப்படுவாராக! என்று சொல்ல விரும்புகிறோம்.

படைப்பின் அழகின் வழியாக, நீரே நன்மையின் ஆதாரமாக உம்மை வெளிப்படுத்துகிறீர்கள். உமது அடையாளத்தைக் காண்பதற்காக எங்கள் கண்களைத் திறக்கவும், அனைத்து படைப்புகளுடனுமான உமது நெருக்கத்தின் மறைபொருளிலிருந்து கற்றுக்கொள்ளவும், நாங்கள் உம்மிடம் வேண்டுகின்றோம்.

இது உலகம் தீர்க்க வேண்டிய பிரச்சினையை விட எல்லையற்றது. இது நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கையுடன் சிந்திக்க வேண்டிய ஒரு மறைபொருளாகும்.

எல்லாப் படைப்புகளிலும் உமது உடனிருப்பை பிரசன்னத்தைக் கண்டறிய எங்களுக்கு உதவும், அப்போதுதான், அதை முழுமையாக அங்கீகரிப்பதன் வழியாக, இந்த பொதுவான வீட்டிற்கு நாங்கள் பொறுப்பு என்பதை உணர முடியும்.

அனைத்து வடிவங்களிலும் உள்ள உயிரைப் பராமரிக்கவும், மதிக்கவும், பாதுகாக்கவும் நீ எங்களை அழைக்கிறீர் என்பதை உணர்ந்து வாழ வரம் தாரும்.

உமக்கேப் புகழ்! ஆண்டவரே! ஆமென்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 செப்டம்பர் 2025, 15:03