MAP

வத்திக்கான் வளாகத்தில் அன்னை மரியா திரு உருவம் முன் திருத்தந்தை பதினான்காம் லியோ வத்திக்கான் வளாகத்தில் அன்னை மரியா திரு உருவம் முன் திருத்தந்தை பதினான்காம் லியோ   (@Vatican Media)

கடவுளின் அருளைப் பெற்றுத் தரும் அன்னை மரியா

லோரெட்டோவின் புனித கன்னி மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயமானது 1775 ஆம் ஆண்டு செப்டம்பர் 8, அன்று புனிதப்படுத்தப்பட்டு 350 ஆண்டுகள் கடந்த நிலையில், குப்பெர்காஸ் நகரம் மற்றும் கொலோன் மறைமாவட்டத்தின் இதயமாக விளங்குகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பல நூற்றாண்டுகளாக மக்களால் வணங்கப்பட்டு வரும் அன்னை மரியா,  கிறிஸ்துவின் உடலின் அனைத்து உறுப்பினர்களாம் மக்களை அரவணைத்துக் காக்கின்றார் என்றும், திருஅவையில் நீண்ட காலமாக கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் இருந்து கடவுளின் அருளை நமக்குப் பெற்றுத்தருபவராக இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜெர்மனியில் உள்ள Köln இல் உள்ள Kupfergasse கருப்பு நிற அன்னை மரியா ஆலயம் அர்ச்சிக்கப்பட்ட 350-ஆவது ஆண்டை சிறப்பிக்க திருத்தந்தையின் சார்பில் கர்தினால் கிறிஸ்டொஃப் கொன்போர்ன் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 9, செவ்வாயன்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி வியன்னா உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயரான கர்தினால் கிறிஸ்டொஃப் கொன்போர்ன் அவர்களை செப்டம்பர் 14, அன்று ஜெர்மனியில் நடைபெறும் 350 ஆவது ஆண்டு குஃபெர்காசே கருப்பு நிறை அன்னை மரியா ஆலயத்தின் விழாவில் பங்கேற்க நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

லோரெட்டோவின் புனித கன்னி மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயமானது 1775 ஆம் ஆண்டு செப்டம்பர் 8, அன்று புனிதப்படுத்தப்பட்டு 350 ஆண்டுகள் கடந்த நிலையில், குப்பெர்காஸ் நகரம் மற்றும் கொலோன் மறைமாவட்டத்தின் இதயமாக விளங்குகின்றது என்றும் குறிப்பிட்டு மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

அன்னை மரியா நம் அனைவருக்கும் அவரது மகனாகிய கிறிஸ்துவின் மீது ஒரு உண்மையான, வலுவான மற்றும் மீற முடியாத நம்பிக்கையை இந்த யூபிலி ஆண்டில் பெற்றுத்தரட்டும் என்றும், விண்ணகத்திலிருந்து மண்ணகம்  வந்த தாயாம் மரியாவிடம் பிறந்தவரும், விண்ணையும் மண்ணையும் உருவாக்கிய தந்தையிடமிருந்து பிறந்தவருமான இயேசுவை நமக்கு தருகின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 செப்டம்பர் 2025, 13:43