MAP

திருத்தந்தை பதினான்காம் லியோ. திருத்தந்தை பதினான்காம் லியோ.  (ANSA)

விண்ணகத்தந்தை அளிக்கும் கொடைக்கு தாராளமாக பதிலளிக்க வேண்டும்

ஒற்றுமை உங்கள் முயற்சிகளின் இன்றியமையாத இலக்காகவும், செயல்களையும் வேலையையும் ஒன்றாக மதிப்பிடுவதற்கான அளவுகோலாகவும் இருக்கட்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பல மொழிகளைப் பேசும் நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடலின் உறுப்புகள். எனவே, இந்த நாட்களில் ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஓர் உண்மையான முயற்சியில் வாழ வேண்டும் என்றும், விண்ணகத் தந்தை நமக்கு அளிக்கும் ஒளி மற்றும் அருளின் மகத்தான அனைவரின் நன்மைக்கான மற்றும் தனித்துவமான கொடைக்குத் தாராளமாக பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 1, திங்களன்று உரோமில் உள்ள புனித அகுஸ்தினார் திருத்தலத்தில் நடைபெற்ற அகுஸ்தீன் சபையின் பொதுப்பேரவையின் தொடக்கத் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செய்வது அனைத்தையும் மனத்தாழ்ச்சியுடன் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், தன்னிடம் எல்லா பதில்களும் இருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் இருப்பதை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

"வானம் பூமியை விட உயர்ந்தது" என்ற விழிப்புணர்வில், கடவுள் நம் உள்ளத்தில் தூண்டுவதை அனைவரும் நம்பிக்கையுடன் வரவேற்க வேண்டும் என்றும், அவருடைய வழிகள் நம் வழிகளை விடவும், அவருடைய எண்ணங்கள் நம் எண்ணங்களை விடவும் மிக உயர்ந்தவை. இந்த வழியில் மட்டுமே ஆவியானவர் இயேசு சொன்னதை "கற்பித்து" "நினைவூட்ட" முடியும் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

கடவுள் நமக்குக் கற்பித்து நினைவூட்டியதை நம் இதயங்களில் பொறிக்க முடியும், இதனால் அதன் எதிரொலி ஒவ்வொரு இதயத்துடிப்பின் தனித்துவத்திலும் மீண்டும் மீண்டும் செய்ய முடியாத தன்மையிலும் அவர்களிடமிருந்து பரவக்கூடும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

ஒற்றுமை உங்கள் முயற்சிகளின் இன்றியமையாத இலக்காகவும், செயல்களையும் வேலையையும் ஒன்றாக மதிப்பிடுவதற்கான அளவுகோலாகவும் இருக்கட்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஏனென்றால் ஒன்றிணைந்து இருப்பது அனைத்தும் அவரிடமிருந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

கேட்டல், பணிவு மற்றும் ஒற்றுமை என்னும் மூன்று பயனுள்ள பரிந்துரைகளை பொதுப்பேரவையில் பங்கேற்பவர்களுக்கு வழங்கிய திருத்தந்தை அவர்கள், தந்தையே, உம்மிடமிருந்து புறப்படும் ஆவியானவர், பரிந்துபேசுபவர், எங்கள் மனதை ஒளிரச் செய்து, உமது மகனின் வாக்குறுதியின்படி, எங்களை எல்லா உண்மைக்கும் வழிநடத்துவாராக" என்ற மன்றாட்டைப் புதுப்பித்து, அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள் எனவும் அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 செப்டம்பர் 2025, 10:27